மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1 முதல் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது. ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது முந்தைய ஓ.எஸ்-ல் இயங்கும் போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது.
அதாவது 10 வருடங்களுக்கு மேலாக உள்ள போன்களில் தான் வாட்ஸ்அப் செயல்படாது. எனவே, உங்களிடம் ஐந்து அல்லது ஆறு வருட பழமையான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் இருந்தாலும், வாட்ஸ்அப் எதிர்பார்த்தபடி செயல்படும்.
Samsung Galaxy Note 2, Samsung Galaxy Ace 3, Samsung Galaxy S4 Mini, Moto G (1st Gen), Motorola Razr HD, Moto E 2014, HTC One X, HTC One X+, HTC Desire 500, HTC Desire 601, HTC Optimus G, HTC Nexus 4, LG G2 Mini. LG L90. Sony Xperia , Sony Xperia SP, Sony Xperia T, Sony Xperia V
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“