Whatsapp 3 different playback speeds for voice messages Tamil News : வெவ்வேறு பின்னணி வேகத்தில் வாய்ஸ் செய்திகளை இயக்கும் திறனை வாட்ஸ்அப் விரைவில் சேர்க்கவிருக்கிறது. தற்போது, பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் வாய்ஸ் செய்திகளை சாதாரண வேகத்தில் அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. வாய்ஸ் செய்தியை மிக மெதுவான அல்லது வேகமான வேகத்தில் கேட்க விரும்புவோருக்கு இந்த அம்சம் உதவும்.
WABetaInfo இந்த அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளது. இது, பயனர்களுக்கு மூன்று பின்னணி வேக விருப்பங்களைப் பெறும் என்பதைக் காட்டுகிறது. இவற்றில் 1.0 எக்ஸ், 1.5 எக்ஸ் மற்றும் 2.0 எக்ஸ் ஆகியவை அடங்கும். இந்த அம்சம் உடனடியாகக் கிடைக்கும் மற்றும் இதைப் பயன்படுத்த நீங்கள் எந்த நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியதில்லை. நீங்கள் ஒரு வாய்ஸ் செய்தியைப் பெறும்போது, வாட்ஸ்அப் அதில் பிளேபேக் வேக பட்டனைச் சேர்க்கும்.
“வாட்ஸ்அப் குறைந்த பின்னணி வேகத்தையும் ஆதரிக்கும். ஆனால், அவை குறைவான அர்த்தமுள்ளதால் அவை மக்களுக்கு வெளியிடப்படாது. இந்த அம்சம் செயல்முறை படுத்தும் படிநிலைகளில் உள்ளது. இது iOS மற்றும் ஆண்டிராய்டு பீட்டா உருவாக்கங்களுக்கும் கிடைக்கும்” என்று மேற்கோள் காட்டப்பட்ட மின் அறிக்கை தெரிவிக்கின்றது. WABetaInfo மேலும் வரும் வாரங்களில் இந்த அம்சம் வெளியிடப்படும் என்று கூறுகிறது.
வாட்ஸ்அப், “மல்டி-டிவைஸ் சப்போர்ட்” என்ற அம்சத்திலும் செயல்படுகிறது. இதனை அதன் தளங்களில் வரும் மாதங்களில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலில் iOS பயனர்களுக்கும் பின்னர் ஆண்டிராய்டு வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“வாட்ஸ்அப், இணையத்துடன் இணைக்க இரண்டு வெவ்வேறு வகையான மல்டி-டிவைஸை உருவாக்கி வருகிறது. இங்கு இணையத்துடன் இணைக்க உங்கள் பிரதான தொலைபேசி இல்லாமல் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தலாம். உங்கள் முக்கிய வாட்ஸ்அப் கணக்கில் நான்கு வெவ்வேறு சாதனங்களை இணைக்கக்கூடிய பிற சாதனங்களுடன் மல்டி-டிவைஸ் செயல்முறையும் இதில் அடங்கும்”
இது தவிர, இந்த நிறுவனம் “மறைகுறியாக்கப்பட்ட சாட் பேக்கப்” அம்சத்தையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் சாட்கள் ஏற்கெனவே முடிவிலிருந்து குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், உங்கள் சாட்களை மூன்றாம் தரப்பு பயன்பாட்டில் காப்புப் பிரதி எடுக்கிறீர்கள். அதாவது கூகுள் ட்ரைவ். வாட்ஸ்அப் புதிய மறைகுறியாக்கப்பட்ட சாட் பேக்கப் விருப்பத்தை சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இது பயனர் தனியுரிமையை மேம்படுத்தி உங்கள் கணக்குகளை ஹேக் செய்யாமல் காப்பாற்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“