WhatsApp ‘Secret Code’ feature for locked chats: வாட்ஸ்அப் டெவலப்பர்கள் லாக் செய்யப்பட்ட ஷேட்களுக்கு ‘சீக்ரெட் கோட்’ என அழைக்கப்படும் புதிய அம்சத்தை டெஸ்ட் செய்து வருகிறது. இந்த புதிய அம்சம் லிங்கிடு டிவைஸ்களில் வேலை செய்து தனிப்பட்ட பாஸ்வேர்ட் செட் செய்ய பயனர்களுக்கு உதவும். லாக் செய்யப்பட்ட ஷேட்களை protected chat folder- ஆக வைத்துக் கொள்ளலாம்.
WABetaInfo-ன் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 2.23.21.9-வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
இந்த புதிய சீக்ரெட் கோட் வசதி, ஆப்-பின் search bar-ல் நேரடியாக லாக் செய்யப்பட்ட ஷேட்களை கண்டறிய மற்றும் லிங்கிடு சாதனங்களில் ஷேட் லாக் செய்யவும் அனுமதிக்கிறது. அதாவது சிம்பிள் வார்த்தை அல்லது இமோஜி பயன்படுத்தி லாக் செய்யப்பட்ட ஷேட்களைத் தேடலாம்.
வாட்ஸ்அப் இந்தாண்டு மே மாதம், ஷேட் லாக் (Chat Lock) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. Biometrics or PIN code பயன்படுத்தி குறிப்பிட்ட ஷேட்களை லாக் செய்யும் வசதி அறிமுகம் செய்தது. இருப்பினும் இந்த வசதியில் ப்ரைமரி டிவைசில் மட்டுமே லாக் செய்யும் வசதி இருந்தது. இந்நிலையில் தற்போது புதிய வசதியில் secondary devices-லும் ஷேட் லாக் வசதி பெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“