மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது.
இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீப காலமாக அதிக அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் தற்போது புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. அதாவது மொபைல் எண்ணிற்கு பதிலாக இ-மெயில் வெரிபிகேஷன் ஆப்ஷன் மூலம் லாக்-கின் செய்யும் வசதியை சோதனை செய்வது வருகிறது.
WABetaInfo தகவல்படி, மொபைல் நம்பர், எஸ்.எம்.எஸ் மற்றும் ஓ.டி.பி மூலம் வாட்ஸ்அப் லாக்-கின் (log in) செய்யப்படும் முறைக்கு மாற்றாக இ-மெயில் வெரிபிகேஷன் ஆப்ஷனை நிறுவனம் சோதனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
‘Email Verification’ அம்சம் ‘Account Section’ பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர் இ-மெயில் ஐ.டி உடன் வாட்ஸ்அப் அக்கவுண்ட் Add செய்யலாம்.
மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதியில் புதிய டிவைஸில் லாக்-இன் செய்ய விரும்பினால் அல்லது ஃபோன்களை மாற்ற விரும்பினால், புதிய டிவைஸில் சிம் போட முடியவில்லை என்றால் இந்த ஆப்ஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விரைவில் இந்த அம்சம் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“