Whatsapps could soon add multiple playback speeds for forwarded audio messages Tamil News : WABetaInfo-ன் அறிக்கையின்படி, பயனர்களுக்கு அனுப்பப்படும் ஆடியோ செய்திகளை விரைவுபடுத்த அனுமதிக்கும் புதிய அம்சத்தைக் கொண்டு வருவதில் வாட்ஸ்அப் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஃபாஸ்ட் பிளேபேக் எனப்படும் இயங்குதளத்தின் முந்தைய அம்சத்தைப் போலவே இந்த அம்சம் செயல்படும். இது பொதுவாக ஆடியோ செய்திகளை 1.5x அல்லது 2x வரை வேகப்படுத்தும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனால், ஆடியோ செய்தியை ஒருவர் மற்றொரு பயனருக்கு அனுப்பும்போது அல்லது ஃபார்வர்டு செய்யப்பட்ட ஆடியோ செய்தியைப் பெறும்போது, பிளேபேக் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விருப்பத்தை அவர்களால் பெற முடியாது. இந்த அம்சம் இப்போது உருவாக்கத்தில் இருப்பதால் விரைவில் இது மாறக்கூடும்.
WABetaInfo-ன் படி, ஃபார்வர்டு செய்யப்பட்ட வாய்ஸ் நோட்ஸ் அல்லது ஆடியோ செய்திகளுக்கான பிளேபேக் வேகத்தை அதிகரிக்கும் அம்சம் எதிர்கால ஆண்டிராய்டு மற்றும் iOS பீட்டா புதுப்பிப்பில் காணப்பட வேண்டும். பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் இன்னும் தெரியவில்லை என்று இணையதளம் கூறுகிறது. ஃபார்வர்டு செய்யப்பட்ட ஆடியோ நோட்டிலும் வேகமான பிளேபேக் அம்சம் இருப்பதைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்டை இது வெளியிட்டுள்ளது.
வாய்ஸ் நோட்ஸ் /ஆடியோ செய்திகளுக்கு வாட்ஸ்அப் அதிக அம்சங்களைச் சேர்ப்பதில் ஆச்சரியமில்லை. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில், டைப் செய்வதில் அனைவருக்கும் திறமை இல்லை.
கூடுதலாக, வாட்ஸ்அப் புதிய சமூக அம்சத்திலும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. WABetaInfo-ன் அறிக்கையின்படி, வாட்ஸ்அப்பில் உள்ள சமூகங்கள், அம்சம், குழுக்கள் மீது நிர்வாகிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும். இது குழுக்களுக்குள் குழுக்களை உருவாக்கும் திறனை உள்ளடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய அம்சம், சமூக அழைப்பு இணைப்பு வழியாக புதிய பயனர்களை அழைக்கும் திறனை அட்மின்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மற்ற உறுப்பினர்களுக்கு இது செய்தி அனுப்பத் தொடங்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil