வாட்ஸ் அப்பில் திரும்ப பெற்ற அல்லது அளித்த செய்திகளை உங்களால் படிக்க முடியும்!

வாட்ஸ் அப்பில், அழித்த செய்திகளை திரும்ப பெற முடியும். நம்மால் படிக்க முடியும் என்கிறார் ஸ்பெயினை சேர்ந்த வலைப்பதிவு எழுத்தாளர் அண்ட்ராய்டு ஜெஃபெ.

whatsapp-delete-message-7591

தற்போது அதிக பயன்பாட்டில் இருக்கும் “வாட்சப்” பல புது அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் “Delete for Everyone” (அனைவருக்கும் நீக்கு) எனும் தேர்வை அறிமுகபடுத்தியது. இதன் மூலம் செய்திகளை அனுப்பிய ஏழு நிமிடங்களில் பெற்றவர் படிக்கும் முன்னே செய்திகளை அழிக்க அல்லது திரும்ப அழைக்க முடியும்.

ஆனால் அழித்த செய்திகளை திரும்ப பெற முடியும். நம்மால் படிக்க முடியும் என்கிறார் ஸ்பெயினை சேர்ந்த வலைப்பதிவு எழுத்தாளர் அண்ட்ராய்டு ஜெஃபெ.

அறிக்கையின் படி, அண்ட்ராய்டு 7.0 நோகட் பயன்படுத்தும் பயனாளர்கள் Notification History என்னும் மூன்றாம் தரப்பு ஆப்-ஐ கைபேசியில் இறக்கினால் போதும். இதன் மூலம் அழித்த அல்லது திரும்ப பெறப்பட்ட செய்திகளை படிக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அழித்த செய்திகளை மட்டுமே படிக்க முடியும். படம் அல்லது வீடியோக்களை பார்க்க முடியாது. இந்த ஆப்-ஐ கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

“நாங்கள் அறிந்தது என்னவென்றால், அனுப்பும் செய்திகள் எல்லாம் நம் கைபேசியின் நோடிபிகேசன் பதிவில் பதிவாகிறது. எனவே அதை பதிவு செய்தால் போதும், இந்த ஆப் அந்த வேலையை செய்கிறது” என்கிறது ஜெஃபெவின் பதிவு.

ஆனால் நோவா போன்ற மற்ற லான்சர்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த ஆப்-ஐ டவுன்லோட் செய்ய தேவை இல்லை. ஹோம் பொத்தானை தொடர்ந்து அழுத்தினால் அது விட்ஜெட் பக்கத்திற்கு எடுத்து செல்லும். அதில் இருந்து, நோடிபிகேசன் லாகை பார்த்துக்கொள்ளலாம்.

மேலே கூறியது போல அழித்த எழுத்து செய்திகளை மட்டும் நம்மால் பார்க்க முடியும். அதிலும் முதல் 100 எழுத்துக்கள் மட்டுமே தெரியும் என விளக்குகிறது அவரின் வலைபதிவு. மேலும் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே அது நம் கைபேசியில் பதிவாகி இருக்கும்; அதுமட்டும் அல்லாமல் கைபேசியை சுவிட்ச் ஆப் செய்தாலோ அல்லது ரீ-ஸ்டார்ட் செய்தாலோ அந்த பதிவு அழிந்துவிடும். இந்த கட்டுப்பாடுகளை தாண்டி தான் உங்களால் திரும்ப பெற்ற அல்லது அழித்த செய்திகளை படிக்க முடியும்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapps deleted messages can still be read heres the trick for doing this

Next Story
ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 நாட்களுக்கு தாக்குபிடிக்கும்… “ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்” ஸ்மார்ட்போன்!sharp
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express