ஜூன் மாதம் போயிங்கின் புதிய ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது பூமி திரும்ப முடியாமல் உள்ளனர்.
8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற அவர்கள் தற்போது பூமி திரும்ப முடியாமல் அங்கு சிக்கி உள்ளனர். இந்நிலையில் அவர்களை அனுப்பிய அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா தற்போது அவர்கள் எப்போது பூமி திரும்புவர் என்பது பற்றி கூறியுள்ளது.
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் "சிக்கவில்லை" என்று நாசா இந்த வாரம் ஒரு அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
எக்ஸ்பெடிஷன் 71 குழுவினருடன் புட்ச் மற்றும் சுனிதா பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் ஸ்டார்லைனர் சோதனை மற்றும் தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவசரநிலை ஏற்பட்டால், இருவரும் ஸ்டார்லைனரில் பூமி திரும்புவர் என்று கூறியுள்ளது.
பூமி திரும்புவது எப்போது?
ஆளில்லாமல் ஸ்டார்லைனர் விண்கலத்தை மட்டும் பூமி திருப்ப முடிவு செய்தால் புட்ச் மற்றும் சுனிதா 2025-ம் ஆண்டு பிப்ரவரி பிற்பகுதி வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் என்று நாசா கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“