வாட்ஸ்அப் பிளஸ், ஜிபி வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துபவர்கள் கவனம் – வாட்ஸ்அப் எச்சரிக்கை!

When Whatsapp sends a temporarily banned message to a user Tamil News அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பதிவிறக்குவதற்கு முன்பு உங்கள் சாட் வரலாற்றைச் சேமிக்கப் பரிந்துரைக்கிறோம்

When Whatsapp sends a temporarily banned message to a user Tamil News
When Whatsapp sends a temporarily banned message to a user Tamil News

When Whatsapp sends a temporarily banned message to a user Tamil News : நீங்கள் மெசேஜிங் செயலியின் ஆதரவற்ற பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ‘தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்ட’ செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பலாம். நீங்கள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு மாறாவிட்டால் வாட்ஸ்அப் கணக்கை நிரந்தரமாகத் தடை செய்யலாம் என்றும் நிறுவனம் கூறுகிறது.

நீங்கள் வாட்ஸ்அப்பின் அசல் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், வாட்ஸ்அப் பிளஸ், ஜிபி வாட்ஸ்அப் போன்ற ஆதரவற்ற செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் அல்லது உங்கள் வாட்ஸ்அப் சாட்களை தொலைப்பேசிகளுக்கு இடையில் நகர்த்துவதாகக் கூறுபவர்கள், வாட்ஸ்அப்பின் மாற்றப்பட்ட பதிப்புகளாக இருப்பதால் நீங்கள் சிக்கலில் இருக்கலாம்.

வாட்ஸ்அப் பிளஸ் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள், அடிப்படையில் அசல் மெசேஜிங் செயலியைப் போன்ற அம்சங்களையும், தானியங்கி பதில்கள், சாட் திட்டமிடல் மற்றும் பல மேம்பட்ட அம்சங்களையும் வழங்குகிறது. வாட்ஸ்அப்பில் இந்த அம்சங்களை யாரும் காண முடியாது.

இந்த வகையான அம்சங்களை வழங்குவதன் மூலம், மூன்றாம் தரப்பு பயன்பாடுகளின் டெவலப்பர்கள் பயனர்களை ஈர்க்க முயல்கிறார்கள். அதே நேரத்தில் வாட்ஸ்அப்பைப் போன்ற ஒரு அனுபவத்தை உறுதியளிக்கின்றனர். மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த நிறையப் பயனர்கள் தங்கள் சாட்களை வாட்ஸ்அப் பிளஸ் அல்லது ஜிபி பிளஸ் போன்ற பயன்பாடுகளுக்கு மாற்றுகின்றனர்.

மெசேஜிங் செயலியின் வழிகாட்டுதல்களை மீறும் ஒரு கணக்கை இனி வாட்ஸ்அப் கண்டறிந்தால், அந்தப் பயனர் தற்காலிக அல்லது நிரந்தரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்.

“இந்த அதிகாரப்பூர்வமற்ற பயன்பாடுகள் மூன்றாம் தரப்பினரால் உருவாக்கப்பட்டவை மற்றும் எங்கள் சேவை விதிமுறைகளை மீறுகின்றன. இந்த மூன்றாம் தரப்பு செயலிகளை வாட்ஸ்அப் ஆதரிக்காது. ஏனெனில், அவர்களின் பாதுகாப்பு நடைமுறைகளை எங்களால் சரிபார்க்க முடியவில்லை” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மெசேஜிங் செயலியின் அதிகாரப்பூர்வ பதிப்பிற்கு நீங்கள் மாற விரும்பினால், முதலில் உங்கள் சாட்களை காப்புப் பிரதி எடுக்க வேண்டும்.

“நீங்கள் வாட்ஸ்அப் பிளஸ் அல்லது ஜிபி வாட்ஸ்அப்பைத் தவிர வேறு ஒரு பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பதிவிறக்குவதற்கு முன்பு உங்கள் சாட் வரலாற்றைச் சேமிக்கப் பரிந்துரைக்கிறோம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தவிர, இந்த மாத தொடக்கத்தில், வாட்ஸ்அப் தீங்கு விளைவிக்கும் நடத்தை மற்றும் ஸ்பேம்களைத் தடுக்க மூன்று மில்லியனுக்கும் அதிகமான இந்தியக் கணக்குகளை ஜூன் 16 முதல் ஜூலை 31, 2021 வரை தடை செய்தது. மேலும், தனது இரண்டாவது அறிக்கையில், 2021 ஐடி விதிகளின்படி வெளிப்படுத்தியது. அங்கீகரிக்கப்படாத தானியங்கி அல்லது மொத்த செய்திகளைப் பயன்படுத்துவதால் இந்தியாவில் 95 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் தடை செய்யப்பட்டதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: When whatsapp sends a temporarily banned message to a user tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com