இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிகவும் அத்தியாவசியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும், இது பல்வேறு நோக்கங்களுக்காக தேவைப்படுகிறது. சிம் கார்டு வாங்குவது முதல் அரசாங்க திட்டங்களைப் பெறுவது வரை முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையில் தனிநபர் பற்றி விவரங்கள் பெயர், தனித்துவ அடையாள எண், போட்டோ, வீட்டு முகவரி உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் சமீப காலமாக ஆதார் அட்டை வைத்து ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெறுகிறது. உங்கள் ஆதார் அட்டை வேறு நபர்களால் பயன்படுத்தப்படுகிறாரா என்பதை கண்டறிந்து பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
- முதலில் MyAadhaar என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கம் செல்ல வேண்டும்.
2. உங்கள் ஆதார் எண், கேப்ட்சா உள்ளிடவும்.
3. Login with OTP என்று கொடுக்கவும்.
4. பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும். அதை உள்ளிடவும்.
5. அடுத்தாக Authentication History செக்ஷன் பக்கம் செல்லவும்.
6. இப்போது தேதியை செலக்ட் செய்து உங்கள் ஆதார் எப்போது, எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சரிபார்க்கவும்.
7. இதில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் ஆதார் வழங்கும் UIDAI நிறுவனத்திடம் புகார் அளிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“