இணையத்தில் பிராந்திய மொழிகள் பயன்பாடு : இந்தியாவில் இணையத்தின் பயன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் இணையம் கண்ட வளர்ச்சி என்பது அபரீதமானது. இந்தியாவில் மட்டும் மொத்தம் 450 மில்லியன் இணைய பயனாளர்கள் இருக்கிறார்கள். அதில் 400 மில்லியன் நபர்கள் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த 400 மில்லியன் பயனாளர்களில் 250 மில்லியன் பயனாளர்கள் தங்கள் மொழிகள் மூலமாகவே இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள். ஆங்கில வழியாக இணைய சேவையைப் பெறுபவர்களை விட பிராந்திய மொழிகள் மூலமாக இணைய சேவையை பெற விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இணையத்தில் பிராந்திய மொழிகள் பயன்பாடு
இந்தியாவிற்கான கூகுள் தலைமை நிர்வாகி ராஜன் ஆனந்தன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிற்காக அளித்த பிரத்யேக பேட்டியில் இது குறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார் “2021ம் ஆண்டுக்குள் பிராந்திய மொழியின் மூலமாக இணையத்தினை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நிச்சயமாக 500 மில்லியனைத் தொடும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலம் தான் இந்தியாவில் இணைய சேவைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்தி மொழி மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கியமான பிராந்திய மொழிகள் மூலமாக நம்மால் இணைய சேவையினை பெற முடியும்” என்று அவர் கூறினார்.
முன்பெல்லாம் பெரும் நகரங்களில் மட்டும் இணைய சேவைகளை பெற முடிந்தது. ஆனால் இன்று நிலை அப்படியாக இல்லை. நிறைய ஊரகப் பெண்கள் அதிக அளவு இணையத்தை பயன்படுத்துகிறார்கள். 2024ம் ஆண்டின் போது இந்தியாவில் 45% பெண்கள் இணையத்தினை பயன்படுத்தும் அளவிற்கு இணைய வசதி இந்தியாவில் பரவலாக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணையத்தில் பிராந்திய மொழிகள் - பி.டி.எப் வடிவில் இருந்து இணையத்திற்கு மாற்ற மாற்று வழி
நவ்லேக்கா என்ற ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி பேசிய அவர், தற்போது இந்திய இணை தளங்களில் காணப்படும் 90% ஆங்கில தகவல்களுக்கான இடத்தினை பிராந்திய மொழிகள் பிடித்துக் கொள்ளும் என்று பேசினார் ராஜன் ஆனந்தன்.
மேலும் படிக்க இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நவ்லேக்கா மூலமாக பிராந்திய மொழிகளிகன் பி.எடி.எஃப். வடிவங்கள் முறைய இணையதளத்திற்கு ஏற்றமாதிரி மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் நாளிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் இருக்கும் அனைத்து விதமான தகவல்களும் இணையத்திற்கு பதிவேற்றப்படும். இதன் மூலம் பிராந்திய மொழிப் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வாய்ஸ் மற்றும் வீடியோக்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு
இதற்காக கூகுள் நிறுவனம் எடுத்துக் கொண்ட நேரம் என்பது மிகவும் அதிகம். கிட்டத்தட்ட 11 இந்திய மொழிகளுக்காக அதிகம் உழைத்து இன்று கூகுள் ட்ரான்ஸ்லேட் வரை கொண்டு வந்திருக்கிறோம். அவை அனைத்தும் மிக நன்றாக வேலை செய்கிறது என்று அவர் கூறியுள்ளார். அதே போல் தற்போது வாய்ஸ் சர்ச் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் கூகுள் அசிஸ்டெண்ட் இயக்கத்தினை அப்டேட் செய்துவருகிறது கூகுள்.
யூடியூப் மற்றும் வீடியோ கண்டெண்ட்களிலும் இந்தியர்கள் அவர்களின் பிராந்திய மொழியையே அதிகம் நாடுகிறார்கள். கடந்த வருடத்தில் ஹிந்தி வாய்ஸ் சர்ச் குயரியை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் வளர்ச்சியும் 400% வளர்ந்துள்ளது.
2014ல் இந்தியாவில் மொத்தம் 14 யூடியூப் சேனல்கள் மட்டுமே இருந்தன. அப்போதே 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருந்தார்கள். தற்போது இந்தியாவில் மட்டும் 300க்கும் மேல் யூடியூப் சேனல்கள் இயங்கி வருகிறது.