பேஸ்புக் நிறுவனம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்த இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், இத்தகைய செயலிகள் டீன் ஏஜ் பெண்களின் மனநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து முக்கிய குழுக்கள் ஆய்வு நடத்துவதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் தனது கிட்ஸ் செயலி அறிமுகத்தை தள்ளிவைத்துள்ளது.
மேலும், ஃபேஸ்புக்கின் உலகளாவிய பாதுகாப்புத் தலைவர் ஆன்டிகோன் டேவிஸ் அமெரிக்க செனட் வர்த்தக துணைக்குழு முன்பு நாளை(செப்டம்பர் 30) ஆன்லைன் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது குறித்தும்,டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை பிரச்சினை குறித்தும் தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னலின் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் ஆஜராக உள்ளார்.
தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை கூறுவது என்ன?
இந்த அறிக்கையானது பேஸ்புக் நடத்திய சொந்த ஆய்வில் இன்ஸ்டாகிராம் அதன் பயனாளர்களில் டீன் ஏஜ் பெண்களை அதிகளவில் பாதிப்பது கண்டறியப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களின் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை விதைக்கிறது. குறிப்பாக, அவர்களது உடல் குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்க இன்ஸ்டாகிராம் வழிவகுக்கிறது ஆகும்.
கணக்கெடுக்கப்பில் மூன்று டீன் ஏஜ் பெண்களில் ஒருவருக்கு உடல் உருவப் பிரச்சினைகளை மோசமாக்கியது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் டீன் ஏஜ் வயது பெண்களுக்கு மனநிலை மாறியதாகவும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய காரணத்தினால் சில நேரங்களில் மனநிலை மாறி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளனர் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தற்கொலை எண்ணங்கள் வந்ததாக 13 சதவிகித பிரிட்டிஷ் பயனர்கள் மற்றும் 6 சதவிகித அமெரிக்கப் பயனர்கள் கூறியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் டிபன்ஸ் என்றால் என்ன?
WSJ கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து பேஸ்புக் துணைத் தலைவரும் ஆராய்ச்சித் தலைவருமான பிரதிதி ராய்சவுத்ரி கருத்து பதிவிட்டிருந்தார். அவர், "நாங்கள் நடத்திய ஆராய்ச்சி, எங்கள் தளத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்யும் நோக்கத்தின் ஒருபகுதியாகும். எந்த இடத்தில் மேம்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறியவே, இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்கிறோம். அதன் காரணமாகவே, ஆய்வு முடிவில் மோசமான முடிவுகள் ஹைல்லைட் செய்து காட்டப்பட்டிருந்தது. அதே போல, பல டீன் ஏஜ் பெண்கள், தங்களது மோசமான சூழ்நிலையிலிருந்து வெளிவர இன்ஸ்டாகிராம் உதவியாக இருந்தது என கூறியதாக தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கின் கூற்று என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில் மன உளைச்சலில் இருந்த டீன் ஏஜ் பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் உதவியாக தான் இருந்துள்ளது. கவலை, தனிமை உள்ளிட்ட பல பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவியுள்ளது.
பதட்டம் மற்றும் மனச்சோர்வு விகிதத்தில் இன்ஸ்டாகிராம் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது வெறும் 40 பேரின் பதில் தான். இந்த செயலியை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 40 பயனர்களின் பதில்களை பெரும் பங்காக எடுத்து விமர்சிப்பது சரியில்லை.
மேலும், இதுவரை ஆய்வின் முடிவுகளை பொதுவெளியில் முழுமையாக பேஸ்புக் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்ஸ் செயலியை நிறுத்த காரணம் என்ன?
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி கூறுகையில், " இன்ஸ்டாகிராஸ் கிட்ஸ் செயலி அறிமுகம் தற்காலிகமாக நிறுத்தவைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இந்த தயாரிப்புக்கான மதிப்பை மற்றும் தேவையை நிரூபிக்க இந்த நேரத்தை நாங்கள் பயன்படுத்துவோம்.
இன்ஸ்டாகிராம் கிட்ஸ் என்பது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான செயலியாக இருக்கும். ஏனென்றால், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடர குறைந்தது 13 வயது எட்டியிருக்க வேண்டும். ஆனால், தற்போது குழந்தைகளுக்கு சிறு வயதிலே ஸ்மார்ட்போன் கிடைத்துவிடுகிறது. வயதுக்கு மீறிய சில செயலிகளை அவர்கள் பதிவிறக்கம் செய்கின்றனர்.
இதைக்கருத்தில் கொண்டு, கிட்ஸ் செயலி தொடங்க முடிவு செய்தோம். இன்ஸ்டாகிராம் கிட்ஸ் வெர்ஷனில் குழந்தைகளை காட்டிலும் பெற்றோருக்கு அதிக கட்டுப்பாட்டையும் மேற்பார்வையும் கொடுக்கிறது. இச்செயலி 10-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டது. பெற்றோர் அனுமதியளிக்கும் பட்சத்தில் தான், இதில் சேர முடியும். இதில் விளம்பரங்கள் இருக்காது. சிறுவர்களின் வயதுக்கு ஏற்ற உள்ளடகத்தை கொண்டிருக்கும். மேலும், பெற்றோர் குழந்தைகள் எவ்வளவு நேரம் செயலி பயன்படுத்துகின்றனர்,யாருக்கு மெசேஜ் அனுப்புகின்றனர், யாரை பின்தொடர்கின்றனர் என்பதை காண முடியும் என்கிறார்.
இன்ஸ்டாகிராம் மனநிலையைப் பாதிப்பதாகக் கூறுவது ஏன்?
பெரும்பாலான சமூக ஊடகங்கள் குறிப்பிட்ட வயதினரை மனசோர்வில் ஆழ்த்துவதாக கூறப்படுகிறது. அதில், இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. இன்ஸ்டாகிராமை முழு நேரம் பயன்படுத்துவோர் பல புகைப்படங்கள், பில்டர், முகத்தை நிறத்தை அதிகரிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இத்தகை கவர்ச்சி கலாச்சாரத்தின் ஆதிக்கம் சமூகத்தில் நச்சு கலந்த சூழலை ஏற்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் WSJ யிடம் "இன்ஸ்டாகிராம் ஒரு மருந்து போன்றது'. அதை ஆய்வு செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
உடல் உருவப் பிரச்சினைகளில் டீன் ஏஜ் பெண்களுக்கானது மட்டும் அல்ல. இளம்பெண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் இன்ஸடாகிராம் நிறுவனத்தைக் கடுமையாகச் சாடி பதிவிட்டிருந்தது.
சுகாதார மையம், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உடல் எடையை அதிகரிக்க உதவும் ‘Apetamin’மருந்தின் விளம்பரங்களை பதிவிடும் கணக்குகளை கண்டறிந்து தடை செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை முழுமையாக நீக்கிட கோரியுள்ளது. ஏனென்றால், இந்த மருந்து பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இன்ஸ்டாகிராம் இந்த மருந்தை விற்கும் கணக்குகளை தான் நீக்க முடியும். விளம்பரம் செய்யும் கணக்குகளைக் கண்டறிவது கடினமான பணி என பதிலளித்துள்ளது.
இத்தகைய விளம்பரங்கள் மூலம் டீன் ஏஜ் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தளமாக இன்ஸ்டாகிராம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.