வாட்ஸ் அப் பயனாளர்கள் நாள் தோறும் அதிகளவில், குட் மார்னிக் மெசெஜ்களை அனுப்பி இணையத்தை நிரப்புவதால், ஸ்மார்ட்போன்கள் விரைவில் ஹாங் ஆவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொழில்நுட்பம் அதிகரித்த இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தாத ஆட்கள் மிகவும் குறைவு. பயனாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு, அந்நிறுவனம் நாளுக்கு நாள், ஸ்டேடஸ் அப்டேடிங், ஜிஃப், மெசேஜ் டெலிடிங் போன்ற பல்வேறு புதுமைகளை வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்து வருகின்றன. இந்நிலையில், எவ்வளவு விலைக் கொடுத்து ஸ்மார்ஃபோன்களை வாங்கினாலும், மெமரி ஸ்பேஸ் அதிகம் கொண்ட மொபைல்களை பயன்படுத்தினாலும், சீக்கிரமாக ஹாங் ஆகிவிடுவதாகவும், மெமரியில் இடமில்லாமல் போவதாக ஸ்மார்ட்ஃபோன்களின் மீது பரவலான குற்றசாட்டு இருந்து வருகிறது.
இதுக்குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு அதிகளவில் குர்மார்னிங் போன்ற வாழ்த்து மெசெஜ்களை அனுப்பவதே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாழ்த்து செய்தியுடன் வரும் புகைப்படங்கள் மற்றும் ஃபார்வட் மெசேஜ்கள் மொபையலின் இணைய பகுதிகளில் குவிந்து வருவதால் நாளடைவில் ஸ்மார்ட்போன்கள் ஹாங் ஆகிவிடுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும், சிறந்த குட்மார்னிக் வாழ்த்து புகைப்படங்களை பயனாளர்கள் இணையதளத்தில் அதிகளவில் தேடி இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, கூகுள் நிறுவனம், ’கூகுள் ஃபைல்ஸ் கோ ஆப்’ ஒன்றை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆன்ராய்ட் வெர்ஷனில் இந்த செயலில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம். இது தேவையற்ற ஃபைல்களை எளிமையாக அழிக்கவும், ஸ்பாம், போலி படங்கள் போன்றவற்றைக் கண்டு நீக்கவும் பயன்படுகிறது.இதனுடன் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த செயலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.