மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப்-ல் ஸ்டிக்கர் அம்சம் மிகவும் பிரபலமாக உள்ளது.
எனினும் இந்த ஸ்டிக்கர்கள் சில போன்களில் அனிமேட் ஆவதில்லை. இதனால் பயனர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், இது ஏன் நடக்கிறது, சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு சரியான காரணம் ஏதும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் இது உங்கள் போன் ஆப்-ல் உள்ள பக் (bug) காரணமாக ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது. இதை சரி செய்ய, ஆண்ட்ராய்டு பயனர்கள் உங்கள் போனை ரீ-ஸ்டார்ட் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/fxRuLD5CMiFhMFDxohhh.webp)
இல்லை என்றால் மற்றொரு ஆப்ஷனும் உள்ளது. வாட்ஸ்அப் ஆப் ஐகானை லாங்-ப்ரஸ் ( long-press) செய்யவும். பின்னர் App info சென்று, Alarms and reminders ஆப்ஷனை டிஸ்ஏபிள் (disable) செய்யவும். இது ஸ்டிக்கர் அனிமேஷன் பக்-ஐ சரி செய்யும்.
இருந்தும் பிரச்சனை தொடர்ந்தால் Alarms and reminders ஆப்ஷனை ரீ-எனெஏபிள் செய்து டிஸ்ஏபிள் செய்யவும் இப்போது அனிமேஷன் பக் சரியாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“