/indian-express-tamil/media/media_files/2025/10/16/wi-fi-8-2025-10-16-18-21-05.jpg)
வைஃபை 7ஐ விட 25% வேகம்: இனி இன்டர்நெட் கட் ஆகாது! வைஃபை 8-ன் அல்ட்ரா நம்பகத் தன்மை!
புதிய தலைமுறை வயர்லெஸ் தரநிலையான வைஃபை 8 (Wi-Fi 8) விரைவில் அறிமுகமாக உள்ளது. சமிபத்தில், டிபி-லிங்க் (TP-Link) நிறுவனம் வைஃபை 8-ன் முன்மாதிரி (Prototype) சோதனையை வெற்றிகரமாக நடத்தி, நம்பகமான சிக்னலிங் மற்றும் வேகமான தரவு பரிமாற்றம் போன்ற அதன் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.
தொழில்துறைப் பங்காளர்களின் உதவியுடன் கட்டமைக்கப்படும் இந்த புதிய தரநிலை (IEEE 802.11bn), குறிப்பாக அதிக சாதனங்கள் நிறைந்த இடங்களில் கூட, மிகவும் நிலையான, அதிவேகமான வயர்லெஸ் இணைப்பை வழங்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
வைஃபை 8-ன் முக்கிய அம்சங்கள்:
வைஃபை 8 ஆனது அல்ட்ரா-ஹை நம்பகத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நெரிசலான அல்லது சிக்னல் குறைவாக இருக்கும் இடங்களிலும்கூட இணைப்புத் துண்டிக்கப்படாமல் நிலையாக இருக்கும். இது வைஃபை 7-ஐ விட சுமார் 25% வேகமாக இருக்கும். மேலும், இது தாமதத்தைக் (Latency) குறைக்கிறது. இதன் காரணமாக, செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ், தொழில்துறை ஆட்டோமேஷன் மற்றும் XR (விரிவாக்கப்பட்ட யதார்த்தம்) போன்ற தொழில்நுட்பங்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
வைஃபை 8 எப்போது வெளியாகும்?
வைஃபை 8-ன் தரநிலை மார்ச் 2028-க்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இந்தத் தரநிலை கொண்ட வணிக ரீதியான தயாரிப்புகள் விரைவில் சந்தைக்கு வரும். வயர்டு இணைப்புக்கு (Wired Connection) இணையான, சீரான மற்றும் குறைவான தாமதத்துடன் கூடிய வயர்லெஸ் இணைப்பை நீங்கள் விரும்பினால், இந்த வைஃபை 8 மேம்படுத்தல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.