நெட்வொர்க் ஸ்லோவா? வைஃபை இருந்தால் போதும்; அன்லிமிடெட் கால்ஸ் இனி இலவசம்!

மொபைல் நெட்வொர்க் இல்லாமல், வைஃபை இணையத்தைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள உதவும் தொழில்நுட்பம் வைஃபை காலிங். இதற்குத் தனி செயலி தேவையில்லை. உங்கள் மொபைலில் உள்ள இந்த அம்சத்தை இயக்கினாலே போதும்.

மொபைல் நெட்வொர்க் இல்லாமல், வைஃபை இணையத்தைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள உதவும் தொழில்நுட்பம் வைஃபை காலிங். இதற்குத் தனி செயலி தேவையில்லை. உங்கள் மொபைலில் உள்ள இந்த அம்சத்தை இயக்கினாலே போதும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Wi-fi calling

நெட்வொர்க் ஸ்லோவா? வைஃபை இருந்தால் போதும்; அன்லிமிடெட் கால்ஸ் இனி இலவசம்!

சமீப காலமாக, நாட்டின் முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ பயனர்கள் பலர் நெட்வொர்க் செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் முக்கியமான நேரங்களில் கால் செய்ய முடியாமல், மொபைல் டேட்டா துண்டிக்கப்படும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வைஃபை காலிங் (Wi-Fi Calling) என்ற தொழில்நுட்பம் இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

வைஃபை காலிங் என்றால் என்ன?

Advertisment

வைஃபை காலிங் என்பது மொபைல் நெட்வொர்க் இல்லாமலேயே, இணைய இணைப்பைப் பயன்படுத்தி அழைப்புகளைச் செய்ய உதவும் தொழில்நுட்பமாகும். இதற்கு எந்தத் தனிப்பட்ட செயலியும் தேவையில்லை. உங்கள் மொபைலில் உள்ள இந்த அம்சத்தை இயக்கினாலே போதும். பலவீனமான மொபைல் நெட்வொர்க் உள்ள பகுதிகளிலும்கூட, இதன் மூலம் தெளிவாகப் பேச முடியும். வைஃபை வசதி இருந்தால், உலகின் எந்தப் பகுதிக்கும் எளிதாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். நெட்வொர்க் செயலிழப்பு ஏற்படும் அவசர காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எப்படி இயக்குவது?

ஐபோனில், முதலில் Settings மெனுவுக்குச் செல்லவும். பின்னர் Cellular அல்லது Mobile Data விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Wi-Fi Calling என்ற விருப்பம் இருக்கும். அதை இயக்கினால் போதும். இயக்கப்பட்டதும், உங்கள் திரையில் 'Airtel Wi-Fi' அல்லது 'Wi-Fi Only' என்று தோன்றும்.

ஆண்ட்ராய்டு போன்களில், உங்கள் மொபைலின் Settings மெனுவைத் திறக்கவும். Connections அல்லது Network & Internet என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Mobile Network அல்லது SIM & Network என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கே Wi-Fi Calling விருப்பத்தைக் காணலாம். அதை இயக்கவும். சில மொபைல்களில், அழைப்பு அமைப்புகள் மெனுவில் நேரடியாகவும் இந்த அம்சம் இருக்கலாம். அப்படி இல்லையென்றால், Settings-ல் உள்ள தேடல் பெட்டியில் 'Wi-Fi Calling' என்று தேடி இயக்கலாம்.

Advertisment
Advertisements

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே பல நகரங்களில் இந்தச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ அனைத்து வட்டங்களிலும் இந்த வசதியைக் கொண்டுள்ளது. வோடபோன் ஐடியா (Vi) படிப்படியாக இதை விரிவுபடுத்தி வருகிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்த, நல்ல வைஃபை நெட்வொர்க் இணைப்பு அவசியம். மொபைல் நெட்வொர்க் பலவீனமாக இருக்கும்போது, இந்த அம்சம் தானாகவே வைஃபை நெட்வொர்க்குக்கு மாறி, தடையற்ற அழைப்புகளை உறுதி செய்கிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: