ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் இயர்பட்ஸ்: விண்டோஸ் 11-ல் மைக்ரோசாஃப்ட்டின் புதிய அம்சம்!

மைக்ரோசாப்ட், விண்டோஸ் 11-ல் "ஷேர்டு ஆudio" (Shared Audio) என்ற புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. இது, ஒரே நேரத்தில் இரண்டு ப்ளூடூத் LE ஆடியோ சாதனங்களுக்கு (ஹெட்போன், இயர்பட்ஸ்) ஆடியோவை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.

மைக்ரோசாப்ட், விண்டோஸ் 11-ல் "ஷேர்டு ஆudio" (Shared Audio) என்ற புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. இது, ஒரே நேரத்தில் இரண்டு ப்ளூடூத் LE ஆடியோ சாதனங்களுக்கு (ஹெட்போன், இயர்பட்ஸ்) ஆடியோவை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.

author-image
Meenakshi Sundaram S
New Update
Windows 11

ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் இயர்பட்ஸ்: விண்டோஸ் 11-ல் மைக்ரோசாஃப்ட்டின் புதிய அம்சம்!

நண்பருடன் ஒரே லேப்டாப்பில் படம் பார்க்கிறீர்கள், அல்லது ஒரே பாடலை இருவரும் கேட்க விரும்புகிறீர்கள். ஆனால், ஆடியோவை மட்டும் எப்படிப் பகிர்வது? இனி அந்த கவலை வேண்டாம். மைக்ரோசாப்ட், விண்டோஸ் 11-ல் "ஷேர்டு ஆடியோ" (Shared Audio) என்ற ஒரு புத்தம் புதிய, சூப்பரான அம்சத்தை சோதனை செய்து வருகிறது.

Advertisment

எப்படி வேலை செய்கிறது?

இந்த "ஷேர்டு ஆடியோ" அம்சம், உங்க லேப்டாப்பில் இருந்து ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் ஹெட்செட் (அல்லது இயர்பட்ஸ்)களுக்கு ஆடியோவை அனுப்பும். 'ப்ளூடூத் LE (Low Energy) ஆடியோ' என்ற நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமாகிறது. இதன் மூலம், நீங்களும் உங்க நண்பரும் ஒரே திரைப்படம் அல்லது பாடலை, தனித்தனி ஹெட்போன்களில் துல்லியமான ஒலியுடன் கேட்டு ரசிக்கலாம்.

யாருக்கெல்லாம் இந்த வசதி கிடைக்கும்?

இந்தக் கலக்கல் அம்சம் தற்போது 'விண்டோஸ் இன்சைடர்' (Windows Insider) பயனர்களுக்கு (Dev மற்றும் Beta சேனல்) சோதனை ஓட்டத்தில் கிடைக்கிறது. ஆனால், ஒரு நிபந்தனை. இப்போதைக்கு, குவால்காம் ஸ்னாப்டிராகன் X (Qualcomm Snapdragon X) ப்ராசசர்களைக் கொண்ட லேட்டஸ்ட் 'கோபைல்ட்+ PC' மாடல்களில் மட்டுமே இது வேலை செய்யும். (புதிய 13.8-இன்ச், 15-இன்ச் சர்ஃபேஸ் லேப்டாப், மற்றும் 13-இன்ச் சர்ஃபேஸ் ப்ரோ).

வரும் வாரங்களில், இன்டெல் கோர் அல்ட்ரா சீரிஸ் 200 (Intel Core Ultra Series 200) ப்ராசசர் கொண்ட சாம்சங் கேலக்ஸி புக்5 சீரிஸ் மற்றும் பிற புதிய சர்ஃபேஸ் மாடல்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

பயன்படுத்துவது எப்படி?

இதை ஆக்டிவேட் செய்வது மிகவும் சுலபம். முதலில், இந்த LE ஆடியோ தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 2 ப்ளூடூத் சாதனங்களை (சாம்சங் கேலக்ஸி பட்ஸ்2Pro, பட்ஸ்3, சோனி WH-1000XM6, புதிய LE ஆடியோ-ரெடி காது கேட்கும் கருவிகள்) உங்க லேப்டாப்புடன் இணைக்க (Pair) வேண்டும்.

பிறகு, ஸ்கிரீன் கீழ் வலது மூலையில் உள்ள 'Quick Settings' மெனுவைத் திறக்க வேண்டும். அங்கே 'Shared Audio' என்ற புதிய பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும், 2 சாதனங்களுக்கும் ஆடியோ பகிரப்படும்!

ஒருவேளை நீங்க லேட்டஸ்ட் விண்டோஸ் பில்டிற்கு அப்டேட் செய்த பிறகும், அந்த 'Shared Audio' பட்டன் தெரியவில்லையா? உங்க ப்ளூடூத் சாதனத்தை ஒருமுறை டிஸ்கனெக்ட் செய்து மீண்டும் கனெக்ட் செய்யுங்கள். அல்லது, உங்கள் ஹெட்செட்/இயர்பட்ஸ்-இன் சாப்ட்வேர் (Firmware) அதன் மொபைல் ஆப் மூலம் அப்டேட் செய்யுங்க. நிச்சயம் வேலை செய்யும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: