கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை
Google chrome : பயனர்கள் திருத்தத்தை அப்டேட் செய்வது வரை, பிழை (bug) விவரங்களுக்கான அணுகல் மற்றும் இணைப்புகள் (links) வரையறுக்கப்படலாம், என ஒரு சிறு குறிப்பு மூலம் கூகுள் விளக்கமளித்துள்ளது.
Google News: மாபெரும் இணையதள தேடல் தளமான கூகுள் தனது Chrome இணைய browser பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரு Chrome அப்டேட்டை வெளியிட்டு அதில் பாதுகாப்பு திருத்தம் (security fix) அடங்கியுள்ளது என தனது பயனர்களிடம் கூறியுள்ளது. Browser ன் புதிய அப்டேட் பதிப்பு (update version) 81.0.4044.113 விண்டோஸ் (windows), Mac மற்றும் Linux ஆகியவற்றுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
புதிய அப்டேட், பாதுகாப்பு திருத்தங்களுடன் மட்டுமே வந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து கூகுள் தற்போது எந்த விவரங்களையும் பகிர்ந்துக் கொள்ளவில்லை. பெரும்பாலான பயனர்கள் திருத்தத்தை அப்டேட் செய்வது வரை, பிழை (bug) விவரங்களுக்கான அணுகல் மற்றும் இணைப்புகள் (links) வரையறுக்கப்படலாம், என ஒரு சிறு குறிப்பு மூலம் கூகுள் விளக்கமளித்துள்ளது.
புதிய அப்டேட் வரும் நாட்களில் அல்லது வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூகுள் ஒரு பிளாக் போஸ்ட் (blog post) மூலம் தெரிவித்துள்ளது.
பிரவுசரின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை சொடுக்கி Help அடுத்து About ஆகியவற்றுக்கு சென்று Chrome பயனர்கள் தங்கள் பதிப்பை சரிப்பார்க்கலாம். இந்த மாத தொடக்கத்தில் கூகுள் தனது, Chrome 81 பதிப்பை வெளியிட்டு ‘Tab Groups’ அம்சத்தை கொண்டு வந்தது. அதன் பெயர் குறிப்படுவது போல இந்த அம்சம் பயனர்கள் tabs களை ஒன்றாக இணைக்க (club) அனுமதிக்கிறது. இதை செய்ய பயனர்கள் ஏதாவது tab ல் right-click அல்லது double-tap செய்ய வேண்டும், 'add to new group' என்பதை தேர்ந்தெடுத்து tab களை அந்த புதிய group ல் இழுக்கவும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த மாதம் கூகுள் தற்காலிகமாக SameSite cookie changes ஐ Chrome ல் திரும்பபெற்றுள்ளது. பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட பதிப்பு 80 ல், privacy ஐ அதிகப்படுத்துவதற்காக மூன்றாம் நபர் குக்கிகளை கையாள்வதற்காக secure-by-default என்பதை Chrome செயல்படுத்த தொடங்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil