/tamil-ie/media/media_files/uploads/2023/06/redmi-2.jpg)
EarBuds
விலையுயர்ந்த ஏர்போட்கள், கேலக்ஸி பட்கள் இருந்தால் தான் ஆடியோ குவாலிட்டி இருக்கும் என்று அர்த்தமில்லை. குறைந்த விலையிலும் பல்வேறு வசதிகளுடன் சிறந்த இயர்பட்கள் வாங்க முடியும். Active noise cancellation (ANC) வசதி, ஆப் சப்போட் உள்பட பல வசதிகளை கொண்டுள்ளது.
ஓபோ என்கோ ஏர் 2 (Oppo Enco Air 2)
ஓபோ என்கோ ஏர் 2 தோற்றத்தில் ஆப்பிள் ஏர்போட்களைப் போலவே இருக்கும். மியூசிக் பிளேபேக்கின் போது நாய்ஸ் கேன்சிலேஷன் வசதி உள்ளது. Active noise cancellation நன்றாக பயன்படுகிறது. சமநிலையான ஆடியோ குவாலிட்டியை உறுதி செய்கிறது. 24 மணி நேரமும் கேட்டக் கூடிய ப்ளேபேக் வசதி கொண்டுள்ளது.
ரெட்மி பட்ஸ் 3 லைட் (Redmi Buds 3 Lite)
ரெட்மி பட்ஸ் 3 லைட் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சூப்பர் ஆடியோ திறன், 18 மணிநேரம் வரை பிளேபேக் ஆகியவை கொண்டுள்ளது. இயர்பட்களில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. அதனால் வேறு மியூசிக், கால்களை எடுப்பது மிகவும் வசதியாக இருக்கும். ரெட்மி பட்ஸ் 3 லைட் ஆன்லைன் தளத்தில் ரூ.2,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் (OnePlus Nord Buds)
புதிய Nord Buds 2r அறிமுகத்திற்கு முன்னதாக, அதன் ஒரிஜினல் OnePlus Nord Buds இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இயர்பட்ஸைப் பயன்படுத்தும் போது நீங்கள் அடிக்கடி அழைப்புகளைச் செய்தால், இவை நிச்சயமாகக் கருத்தில் கொள்ளத்தக்கவை. சிறந்த ஆடியோ குவாலிட்டி கொண்டுள்ளது. 24 மணிநேர பேட்டரி லைப் இதன்
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.