நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மீண்டும் அதில் பூமி திரும்ப இருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவர்களை அங்கே விட்டு விண்கலம் மட்டும் இன்று (செப்.7) வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.
ஸ்டார்லைனர் விண்கலம், நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
ஜூன் 5-ல் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்டார்லைனர் விண்கலம் அனுப்பப்பட்டது. ஸ்டார்லைர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு, எஞ்சின் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரை இதில் அழைத்து வரும் முடிவை நாசா தற்காலிகமாக கைவிட்டது.
அவர்கள் இருவரும் இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கி உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் அடுத்தாண்டு பிப்ரவரி 2025-ல் அவர்கள் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“