சீனாவில் பெண் ஒருவரின் ஐபோன் 47 ஆண்டுகள் லாக் ஆன நிகழ்வு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஷாங்காய் நகரைச் சேர்ந்த லூ என்ற பெண்மனி தனது மகனிடம் ஐபோனை கொடுத்து விட்டு கடைக்கி சென்றுள்ளார். அப்போது சிறுவன், ஃபோனை யூஸ் செய்வதற்காக மொபைலை ஆன் செய்துள்ளான். ஆனால். பாஸ்வேர்ட் கேட்டதால் தனக்கு தெரிந்த் எல்லா வகையான எழுத்துகளையும், நம்பர்களை டைப் செய்து மீண்டும் மீண்டும் முயற்சித்துள்ளான்.
ஆப்பிள் கருவிகளில் ஒவ்வொரு முறையும் தவறான பாஸ்வேர்டை உள்ளிடும் போது அது சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் என்று குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கும். இது ஸ்மார்ட்போனை திருடி, அதன் பாஸ்வேர்ட்டை பிரேக் செய்ய நினைப்பவர்களிடம் இருந்து கருவியை காக்கும் முனைப்பின்கீழ் உருவாக்கம் பெற்றதொரு அம்சமாகும்.
ஆனால், இந்த அம்சம் லூயின் வாழ்க்கையில் இப்படி விளையாடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தவறான பாஸ்வேர்டை பயன்படுத்தியதால் ஐபோன் லாக் ஆனது. தவறான பாஸ்வேர்ட்களை பல முறை உள்ளிட்டத்தின் விளைவாக 25 மில்லியன் நிமிடங்கள் 'லாக்' ஆகியுள்ளது. ஆதாவது சுமார் 47 ஆண்டுகள்.
இதைப்பார்த்த லூ அதிர்ச்சி அடைந்து, சர்வீஸ் செண்டருக்கு சென்று ஐபோன் லாக் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். ஃபோனை சோதித்து பார்த்த ஊழியர், இனிமேல் இந்த ஃபோனை பயன்படுத்த இயலாது என்றூ கூறியுள்ளார். இதற்கும் முன்பு, இதே வழிமுறையின் கீழ் நடந்தவொரு சம்பவத்தில் ஒரு ஐபோன் ஆனது 80 வருடங்களுக்கும் மேலாக லாக் ஆகியது குறிப்பிடத்தக்கது.