scorecardresearch

மக்களே உஷார்… ரூ15 லட்சம் அபேஸ்… ரூட்டை மாற்றும் ஆன்லைன் திருடர்கள்!

வாட்ஸ்அப்பில் மகள் போல் மெசேஜ் செய்த மோசடிகாரர்களிடம் ரூ15 லட்சத்தை இங்கிலாந்து சேர்ந்த பெண்மணி இழந்துள்ளார். வாட்ஸ்அப் மோசடியிலிருந்து தப்பிக்க சில டிப்ஸை இங்கே காணலாம்.

மக்களே உஷார்… ரூ15 லட்சம் அபேஸ்… ரூட்டை மாற்றும் ஆன்லைன் திருடர்கள்!

ஆன்லைனில் பண மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் குறித்து பெரியளவில் புரிதல் இல்லாத வயதோனர்களை மோசடிகாரர்கள் டார்கெட் செய்கின்றனர். அவர்களும் எளிதாக ட்ராப்பில் விழுந்துவிடுகின்றனர். எனவே, ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் அவசியம்.

ஆன்லைனில் எவ்விதவிதமான லிங்க் கிளிக் செய்யாமலே, ரூ15 லட்சத்தை இங்கிலாந்தை சேர்ந்த பவுலா பௌஜிதன் என்பவர் இழந்துள்ளார். பணத்தை சுருட்ட எப்போதும் லிங்க் அனுப்பும் மோசடிக்காரர்கள், இவரை வித்தியாசமான முறையில் வலையில் சிக்கவைத்துள்ளனர். அப்பெண்ணின் மகள் போல் மெசேஜ் செய்து, பணத்தை சுருட்டியுள்ளனர்.

மோசடிக்காரர்களின் மெசேஜ் தனது மகள் அனுப்பியது போலவே இருந்ததால் ஏமாந்துவிட்டதாகவும், குட் நைட் மெசேஜ் வரவில்லை என்ற சமயம் தான் சந்தேகம் வந்து விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, எனது மகள் பெயரில் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தது. பழைய நம்பரை டெலிட் செய்துவிடுங்கள். இதுதான் என்னுடைய புதிய நம்பர் என தெரிவித்தனர். சிறிது நேரம் சாதாரணமாக தான் சாட் செய்தோம். மகள் போலவே தான் அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசினார்கள். பின்னர், பணம் தேவைப்படுகிறது அக்கவுண்டில் அனுப்பமுடியுமா என மெசேஜ் வந்தது. நான் எப்போதும் போலவே அனுப்புகிறேன் என சொன்னதும், வங்கி கணக்கு விவரங்கள் மெசேஜில் வந்தது.

மகள் மெசேஜில் சொன்னப்படியே பல பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், இரவு குட் நைட் மெசேஜ் வரவில்லை என்பதால், சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மகளை தொடர்புகொண்ட போது தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அப்பெண்மணி உணர்ந்துள்ளார்.

உடனடியாக அவரும், அவரது மகளும், வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டிதில், கடைசி பணப்பரிவரத்தனையை மட்டுமே தான் தடுத்திட முடிந்துள்ளது. மற்றவற்றை தடுத்திட முடியவில்லை. அவர், 16 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ15 லட்சம்) வாட்ஸ்அப் மோசடியில் இழந்துள்ளார்.

லிங்க்களை மக்கள் கிளிக் செய்வதில் விழிப்புணர்வுடன் இருப்பதால், புதிய முயற்சியாக வாட்ஸ்அப் கணக்கை குறிவைக்க மோசடிகாரர்கள் தொடங்கியுள்ளனர். அண்மையில், செல்போனில் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டு, 405 என்ற நம்பரை டைப் செய்யும்படி கூறி, அவரது வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சம்பவமும் அரங்கேறியது.

வாட்ஸ்அப் மோசடியில் தப்பிப்பது எப்படி?

  1. தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்பை எடுக்காதீர்கள். மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்யாதீர்கள்.
  2. தவறுதலாக, தொலைப்பேசி அழைப்பை எடுத்துவிட்டால், பேசிக்கொண்டிருக்கும் போது வரும் ஓடிபியை சொல்லவோ அல்லது மொபைலில் டைப்போ செய்யாதீர்கள்.
  3. முக்கியமாக வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை யாருடனும் பகீராதிர்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Women loses rs 15 lakh on whatsapp scammer message like daughter

Best of Express