/indian-express-tamil/media/media_files/2025/09/21/1950-invention-2025-09-21-18-41-54.jpg)
போலியோ தடுப்பூசி முதல் பார்பி பொம்மை வரை... 1950களில் உலகை மாற்றிய 20 முக்கிய கண்டுபிடிப்புகள்!
1950-களில் அரசியல் பதற்றங்களும், சமூக மாற்றங்களும் நிறைந்திருந்தன. ஆனால், அந்த பரபரப்பான காலகட்டத்தில் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. போலியோ தடுப்பூசி முதல் கிரெடிட் கார்டு வரை, அந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த சில முக்கியமான கண்டுபிடிப்புகள் இங்கே சுவாரஸ்யமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
1. கிரெடிட் கார்டு:
1950-களுக்கு முன்பு, மக்கள் பணமாகவோ? அல்லது தவணை முறையிலோ? மட்டுமே பொருட்களை வாங்கினர். ஆனால், 1950-ல் பிராங்க் மெக்னமாரா, ரால்ப் ஷ்னீடர், மேட்டி சிம்மன்ஸ் ஆகியோர் இணைந்து உலகின் முதல் கிரெடிட் கார்டான 'டின்னர்ஸ் கிளப்' அறிமுகப்படுத்தினர். இது பொருளாதாரம் மற்றும் நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கங்களை முற்றிலும் மாற்றியமைத்தது.
2. போலியோ தடுப்பூசி:
1952-ல் ஜோனாஸ் சால்க் என்பவர் போலியோவுக்கு முதல் பயனுள்ள தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். போலியோ ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்றது அல்லது முடக்கியது. சால்க்கின் தடுப்பூசி உலகம் முழுவதும் பெருமளவில் பரவி, போலியோவை கிட்டத்தட்ட ஒழித்தது.
3. பிளாக் பாக்ஸ் (விமானப் பதிவு கருவி):
விமான விபத்துகளுக்குப் பிறகு, 1953-ல் டாக்டர் டேவிட் வாரன் என்பவர் முதல் "பிளாக் பாக்ஸ்" கருவியை உருவாக்கினார். இது விமானியின் குரல் மற்றும் விமானத்தின் தரவுகளைப் பதிவு செய்து, விபத்துக்கான காரணத்தைக் கண்டறியப் புலனாய்வாளர்களுக்கு உதவியது.
4. டிரான்சிஸ்டர் ரேடியோ:
1954-ல் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் ரீஜென்சி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் முதல் டிரான்சிஸ்டர் ரேடியோவை அறிமுகப்படுத்தின. இலகுவான, சிறிய, பேட்டரியில் இயங்கும் இந்த ரேடியோக்கள் இளைஞர்கள் எங்கு வேண்டுமானாலும் ராக் அண்ட் ரோல் இசையைக் கேட்க உதவின. இதுவே வாக்மேன், ஐபாட், ஸ்மார்ட்போன்கள் போன்ற கருவிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
5. மைக்ரோவேவ் அவன்:
மைக்ரோவேவ் சமையல் முறை 1950-களுக்கு முன்னரே இருந்தாலும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய முதல் மைக்ரோவேவ் அவன் 1955-ல் விற்பனைக்கு வந்தது. இது சமைக்கும் நேரத்தைக் குறைத்து, மீந்துபோன உணவை மீண்டும் சூடுபடுத்துவதை எளிதாக்கியது.
6. வெல்க்ரோ:
நாயின் முடியில் ஒட்டியிருந்த முட்களை கண்டு ஈர்க்கப்பட்ட சுவிஸ் பொறியாளர் ஜார்ஜ் டி மெஸ்ட்ரால், 1955-ல் வெல்க்ரோவை கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் இது நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் ஆடைகள், ஷூக்கள் மற்றும் விண்வெளி உடைகளிலும் முக்கிய அங்கமாக மாறியது.
7. பார்பி பொம்மை:
1959-ல் ரூத் ஹேண்ட்லர் பார்பி பொம்மையைக் கண்டுபிடித்தார். மற்ற பொம்மைகளைப் போலல்லாமல், பார்பி ஒரு வளர்ந்த பெண் கதாபாத்திரம் என்பதால், குழந்தைகள் பல்வேறு வாழ்க்கை முறைகள் மற்றும் வேலைகளைப் பற்றி கற்பனை செய்ய அது உதவியது.
8. சிப் (Integrated Circuit):
1958-ல் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸில் பணிபுரிந்த ஜாக் கிர்பி, பல மின்னணு செயல்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப்பைக் கண்டுபிடித்தார். இதுவே நவீன கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
9. 3-புள்ளி சீட் பெல்ட்:
1959-ல் வால்வோ நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்வீடிஷ் பொறியாளர் நில்ஸ் போஹ்லின், 3-புள்ளி சீட் பெல்ட்டைக் கண்டுபிடித்தார். இது உடலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளைப் பாதுகாத்து, விபத்துக்களின்போது ஏற்படும் காயங்களைக் குறைத்தது.
10. ஹார்ட் டிஸ்க் டிரைவ்:
1956-ல் ஐபிஎம் நிறுவனம் முதல் ஹார்ட் டிஸ்க் டிரைவை அறிமுகப்படுத்தியது. ரெனால்ட் பி. ஜான்சன் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட இது, தரவைச் சேமிக்க சுழலும் தட்டுகளைப் பயன்படுத்தியது. இன்றைய தரவுகளுடன் ஒப்பிடுகையில் இதன் சேமிப்பு திறன் குறைவாக இருந்தாலும், அது ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாக இருந்தது.
11. ஸ்புட்னிக் 1:
1957-ல் சோவியத் யூனியன் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1-ஐ விண்ணில் செலுத்தியது. இது அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே விண்வெளிப் போட்டிக்கு வழி வகுத்தது.
12. லேசர்:
1958-ல் இயற்பியலாளர்கள் சார்லஸ் எச். டவுன்ஸ் மற்றும் ஆர்தர் எல். ஸ்காவ்லோ ஆகியோர் லேசர் கருத்தாக்கத்தை உருவாக்கினர். இது தொலைத்தொடர்பு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
13. கலர் டிவி:
1954-ல் ஆர்சிஏ நிறுவனம் கலர் டிவியை அறிமுகப்படுத்தியது. தொலைக்காட்சியில் வண்ணங்கள் வந்ததால் பொழுதுபோக்கு மிகவும் உயிரோட்டம் பெற்றது.
14. போயிங் 707:
1958-ல் போயிங் நிறுவனம் முதல் பயணிகள் ஜெட் விமானமான 707-ஐ உருவாக்கியது. இது விமானப் பயணத்தை மலிவானதாகவும், பயண நேரத்தை பாதியாகக் குறைப்பதாகவும் மாற்றியது.
15. ஜெராக்ஸ் 914 ஃபோட்டோகாப்பியர்:
முதல் வெற்றிகரமான பேப்பர் ஜெராக்ஸ் இயந்திரமான ஜெராக்ஸ் 914, ஆவணங்களை விரைவாகவும் மலிவாகவும் நகலெடுத்து, அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பதிப்பகத் துறையை மாற்றியமைத்தது.
17. வானிலை செயற்கைக்கோள்:
1959-ல் முதல் வானிலை செயற்கைக்கோளான வேங்கார்ட் 2 விண்ணில் ஏவப்பட்டது. இது மேகங்கள் மற்றும் பூமியின் வளிமண்டலம் பற்றிய முக்கியமான தரவுகளைச் சேகரித்தது.
18. புல் வெட்டும் இயந்திரம் (Riding Mower):
1959-ல் லியோனார்ட் குடால், சவாரி செய்யக்கூடிய முதல் புல் வெட்டும் இயந்திரத்தை உருவாக்கினார். இது புல் வெட்டும் வேலையை எளிதாகவும், வேமாகவும், சோர்வின்றியும் மாற்றியது.
19. பேஸ்மேக்கர்:
1985-ல் பொறியாளர் ரூன் எல்ம்கிவிஸ்ட் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆக் சென்னிங் ஆகியோர் ஒருவருக்கு முதல் உள் பேஸ்மேக்கரை பொருத்தினர். இது இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தி, மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.
20. சூப்பர் குளூ:
1951-ல் டாக்டர் ஹாரி கூவர் சூப்பர் குளூவைக் கண்டுபிடித்தார். முதலில் இது நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் பெரும் வணிக வெற்றியை அடைந்து, இன்று பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. 1950-கள் நமக்கு அளித்த இந்த அசாதாரணமான கண்டுபிடிப்புகள், நவீன உலகில் நாம் வாழும் விதத்தை மாற்றியமைத்ததோடு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.