உலகில் தினம் தினம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்து கின்றன. அந்த வகையில் இன்று சமீபத்திய டாப் 5 கண்டுபிடிப்புகள் பற்றி பார்ப்போம்.
உலகின் பழமையான ஒயின் கண்டுபிடிப்பு
தெற்கு ஸ்பெயினில் உள்ள ரோமானிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான உண்மையான திரவ ஒயின் தற்போதைய பழையான ஒயின் கண்டுபிடிப்பாக பார்க்ப்படுகிறது, இந்த கண்டுபிடிப்பு 2019-ல் செய்யப்பட்டது.
பனிகட்டிகளில் பழங்கால வைரஸ்
சைபீரியாவில் 30,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆர்க்டிக் ஜாம்பி வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது புதுவகையான தொற்றுநோயை தூண்டக்கூடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். ஏனெனில் இது செயலற்ற நோய்க்கிருமிகளை வெளியிடுவது பற்றிய கவலையை எழுப்புகிறது.
சிறிய ரோபோக்கள்
கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் ஒத்துழைத்து ஒன்றிணைக்கும் திறன் கொண்ட சிறிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த மைக்ரோ இயந்திரங்கள் மருந்து விநியோகம் மற்றும் சுற்றுப்புறச் சுத்தப்படுத்துதல் போன்ற பயன்பாடுகளுக்கான திறனைக் கொண்டுள்ளன.
மரபணு எடிட்டிங்
மரபணு எடிட்டிங் அல்லது இதய நோய்- விஞ்ஞானிகள் மனித கருவில் உள்ள உயிருக்கு ஆபத்தான இதய நிலைக்கு காரணமான மரபணு மாற்றத்தை சரிசெய்ய CRISPR மரபணு எடிட்டிங்கைப் பயன்படுத்தினர். இந்த ஆராய்ச்சி மரபியல் நோய்களைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது, இருப்பினும் நெறிமுறை கவலைகள் தொடர்ந்தன.
எக்ஸோப்ளானெட்
ஜேம்ஸ் வெப் ஸ்பிசிஸ் தொலைநோக்கி ஒரு புதிய எக்ஸோப்ளானெட்டைக் கண்டுபிடித்தது, அதன் அறிக்கைகளின்படி, K2-18b கடல் உலகத்தின் வளிமண்டலத்தில் உயிர் வாழக்கூடிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“