Advertisment

ரூ.10,000 விலையில் அறிமுகமாகிறது உலகின் முதல் க்வாட் கேமரா ஸ்மார்ட்போன்...

Realme 5 specifications : சோனியின் IMX586 ப்ரைமரி கேமரா பொருத்தப்பட்டு வெளியாகிறது ரியல்மீ 5 ப்ரோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
World's first quad-camera smartphone Realme 5 specifications, World's first quad-camera smartphone Realme 5 specifications, price

World's first quad-camera smartphone Realme 5 specifications

World's first quad-camera smartphone Realme 5 specifications, price, launch, and availability : வருகின்ற ஒரு வாரம், ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு கொண்டாட்டமான வாரம் தான். ஏற்கனவே ஓப்போவின் ரினோ அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் ரியல்மீ 5 வெளியாக உள்ளது.  ரெனோ 2 போன்றே இந்த ஸ்மார்ட்போனும் 4 கேமராக்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000க்கும் குறைவாகவே தான் இருக்கும் என்று அறிவிக்கிறார் இந்த நிறுவனத்தின் செயல் தலைவர்.

Advertisment

மேலும் படிக்க :Oppo Reno 2 : நான்கு கேமராக்களுடன் 28ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது

ரியல்மீயின் சி.இ.ஒ மாதவ் சேத் இந்த அறிவிப்பை வெளியிடும் போது, “உலகின் முதல் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அதுவும் ரூ.10 ஆயிரம் விலையில்... இந்தியாவில் தான் அறிமுகம்” என்றும் கூறியுள்ளார். அதனால் இந்த ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகிறது.  இதன் ப்ரோ வெர்ஷனும் அதே நாளில் வெளியாகிறது. ஆனால் அதன் முதன்மை கேமரா செயற்திறன் 48 எம்.பி. ஆகும்.

World's first quad-camera smartphone Realme 5 specifications

இந்த ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் பக்கத்தை திறந்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். அந்த பக்கத்தில் இருக்கும் தகவல்களின் படி ரியல்மீ 5 கேமராவின் ப்ரைமரி லென்ஸின் அப்பேச்சர் f/1.8 ஆகும்.  செகண்டரி கேமரா 119-டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸினை கொண்டுள்ளது. மூன்றாவது கேமரா சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவது ஒன்று போர்ட்ரைட் லென்ஸ் ஆகும்.  இதன் பேட்டரி 5,000mAh சேமிப்புத்திறனை கொண்டுள்ளது.  பின்பக்கத்தில் வட்டவடிவிலான ஃபிங்க்ர் பிரிண்ட் சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Realme 5 pro specifications

சோனியின் IMX586 ப்ரைமரி கேமரா பொருத்தப்பட்டு வெளியாகிறது ரியல்மீ 5 ப்ரோ. இரண்டாம், மற்றும் இதர கேமராக்கள் ரியல்மீ 5-ல் இருக்கும் அதே கேமரா செயற்திறன்களையே பெற்றுள்ளது.  வூக் சார்ஜரின் 3.0 தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 30 நிமிடங்களில் 55% வரை போன் சார்ஜ் ஆகிவிடும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,000க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment