எலான் மஸ்க்கிற்கு சொந்தமான பிரபல சமூக வலைதளமான எக்ஸ் செயலி (முன்னர் ட்விட்டர்) இன்று (புதன்கிழமை) காலை முதல் திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. புகார்களை கண்காணிக்கும் பிரபல டவுன்டெக்டர் நிறுவனம் இதை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 36,500 பயனர்கள் எக்ஸ் (X ) தளத்தை பயன்படுத்த முடியவில்லை என இதில் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கனடா, இங்கிலாந்தில் இருந்தும் புகார்கள் பதிவாகியுள்ளன. புதிய பதிவுகளை பார்க்க முடியவில்லை, ஃபீடு பக்கம் ரீஃபிரஸ் செய்ய முடியவில்லை என இந்தியாவில் உள்ள பயனர்கள் கூறியுள்ளனர். எனினும் இந்த செயலிழப்பு 1 மணி நேரம் மட்டுமே நீடித்ததாக கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“