Advertisment

இந்தப் பயனர்களுக்கு X பிரீமியம் சந்தா இலவசம்: எலான் மஸ்க் புதிய அறிவிப்பு

அதிக எண்ணிக்கையிலான வெரிபைட் ஃபாலோவர்ஸ் (Verified Followers) கொண்ட பயனர்களுக்கு X பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும் என உரிமையாளர் மஸ்க் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
ElonX.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எலான் மஸ்க் இன்று வியாழக்கிழமை கூறுகையில்,  X தளத்தில் குறிப்பிட்ட பயனர்களுக்கு X பிரீமியம் மற்றும் பிரீமியம்+ features சந்தா இலவமாக வழங்கப்படும் என அறிவித்தார். அதாவது, ​​2500-க்கும் மேற்பட்ட வெரிபைட் ஃபாலோவர்ஸ் கொண்ட பயனர்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும் என்றும் அதேபோல் 5000-க்கும்  மேற்பட்ட வெரிபைட் ஃபாலோவர்ஸ் கொண்ட பயனர்களுக்கு பிரீமியம்+ சந்தா பயன்கள் இலவசமாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisment

மேற்குறிப்பிட்ட தகுதி கொண்ட அனைத்து பயனர்களுக்கும் பிரீமியம் மற்றும் பிரீமியம்+ சந்தா இலவசமாக வழங்கப்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார். ஒரு ப்ரோஃபைல்லில் வெறுமனே 2,500 ஃபாலோவர்ஸ் இருந்தால் 

X பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. பதிலாக,  அந்த ப்ரோஃபைல்லில் 2500-க்கும் மேற்பட்ட வெரிபைட் ஃபாலோவர்ஸ் அதாவது அவர்கள் ஏதாவது  X சந்தாக்களை பேஸிக், பிரீமியம் அல்லது பிரீமியம்+ சந்தா பயனராக இருக்க வேண்டும். இந்த சந்தா பயனர்கள், சந்தா பெறாத பயனரை பின்தொடரும் போது அந்த பயனருக்கு இலவச சந்தா வழங்கப்படும் என்பதாகும். 

பிரீமியம் மற்றும் பிரீமியம்+ சந்தாகளில் பல வசதிகள் உள்ளன. GrokAI-க்கான அணுகல், ப்ளூ டிக் மார்க், அதிக வார்த்தைகள் கொண்ட போஸ்ட் பதிவிடுதல், எடிட் அம்சம் மற்றும் பல உள்ளன.  கூடுதலாக, பிரீமியம் சந்தாதாரர்கள் சற்று குறைவான விளம்பரங்களைக் காண்பார்கள். அதே சமயம் பிரீமியம்+ பயனர்கள் விளம்பரமில்லா X தளத்தை பயன்படுத்த முடியும்.  சில நாட்களுக்கு முன்பு வரை, GrokAI ஆனது பிரீமியம்+ சந்தாதாரர்களுக்கு மட்டுமே இருந்தது. இப்போது பிரீமியம் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. xAI-ன் சமீபத்திய AI சாட்பாட் இந்தியா உட்பட 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது, ​​டெஸ்க்டாப்பில் இருந்து சந்தா செலுத்தும் போது, ​​பிரீமியம் சந்தா ஒரு மாதத்திற்கு ரூ.650 செலவாகும், மேலும் விலையுயர்ந்த பிரீமியம்+ சந்தா ரூ.1,300 ஆக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

ElonMusk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment