/indian-express-tamil/media/media_files/RdJc0Y98pDE3t0pG9yfp.jpg)
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளம் ப்ரைவேட் லைக்ஸ் (private likes) என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது. இது பயனர்களில் பதிவு தொடர்பான அம்சமாகும். பெயர் குறிப்பிடுவது போலவே, பயனர்கள் ஒருவருடைய பதிவை தனிப்பட்ட முறையில் லைக் செய்யலாம். இது பொது வெளியில் காண்பிக்கப்படாது. இந்த அம்சம் ஏற்கனவே X சந்தா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இது அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மஸ்க் கூறுகையில், "மக்கள் தங்கள் விருப்பங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். எவ்வித அச்சமும் இல்லாமல், தாக்குதல் போன்ற எவ்வித அச்சமும் இல்லாமல் ஒருவர் எவ்வித பதிவையும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த அம்சம் கொண்டு வரப்படுகிறது. இது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்" என்று அவர் கூறியுள்ளார்.
X தளத்தில் இன்ஜினியரிங் இயக்குனர் Haofei Wang கூறுகையில், :இந்த புதிய அம்சம் பயனர்களின் பப்ளிக் இமேஜை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. பல பயனர்கள் சர்ச்சைக்குரிய அல்லது விவாதத்திற்குரிய பதிவிற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் சில சமயங்களில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதை தடுக்கும் வகையில் ப்ரைவேட் லைக்ஸ் அம்சம் தனிப்பட்ட முறையில் லைக் செய்து பயனர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.