எலான் மஸ்க் தனது X பக்கத்திற்கு மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி X தளத்தில் சேரும் புதிய பயனர்கள் போஸ்ட் பதிவிடவும், மற்றவர்களுடன் உரையாடவும் கட்டணம் செலுத்த
வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான உரையாடலின் போது, கோடீஸ்வரர் எலான் மஸ்க் கூறுகையில், X தளத்தில் போட் ஆர்மிகளை சமாளிப்பதற்கான சிறந்த வழி "சிறிய அளவில் கட்டணம்" வசூலிப்பதாகும் என்று கூறினார்.
அதாவது போலி பயனர்களை தடுப்பதற்கு இந்தக் கட்டண திட்டம் கொண்டு வரப்படுவதாக எலான் மஸ்க் கூறினார். இது திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் மஸ்க் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "X தளத்தில் சேரும் புதிய பயனர்கள் போஸ்ட் பதிவிட கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் தற்போது உள்ள ஏ.ஐ டூல்ஸ் போலி கணக்குகளை எளிதாக கண்டறியும். புதிதாக தளத்தில் சேரும் அன்வெரிவைட் பயனர்கள் (unverified users) போஸ்ட் பதிவிட, மற்றவர்களுடன் உரையாட, லைக், புக்மார்க் செய்யஇந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த புதிய பயனர்கள் தளத்தில் சேர்ந்து மற்றவர்களின் போஸ்ட்டை படிக்கலாம், அவர்களை பின்தொடரலாம் ஆனால் போஸ்ட் செய்ய முடியாது. கட்டணம் செலுத்தாமல் போஸ்ட் செய்ய வேண்டும் என்றால் இவர்கள் 3 மாதம் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் கட்டணம் செலுத்தாமல் போஸ்ட் பதிவிட முடியும்.
தொடர்ந்து இதுகுறித்தான மற்ற விவரங்கள் எப்போது இந்த திட்டம் கொண்டு வரப்படும், எவ்வளவு தொகை செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அறிவிப்புகள் இல்லை.