/indian-express-tamil/media/media_files/RdJc0Y98pDE3t0pG9yfp.jpg)
எலான் மஸ்க்கின் X தளம் அண்மையில் தனது Content moderation விதிகளில் மாற்றம் செய்த நிலையில், தளத்தில் இப்போது அடல்ட் கன்டெண்ட் பதிவிட அனுமதிக்கிறது. இந்த மாற்றங்களுக்கு முன், X பயனர்கள் பிளாட்ஃபார்மில் அடல்ட் கன்டெண்ட் பதிவிட அனுமதியும் வழங்கவில்லை அல்லது தடையும் செய்யவில்லை. இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. Not Safe for Work (NSFW) communities விதிகளையும் கொண்டுள்ளது.
"பாலியல் கருப்பொருள்கள் படி உருவாக்கப்பட்டு பதிவிடப்படும் வரை கன்டெண்ட் நிறுவனத்தின் கொள்கை விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே சமயம் pornography தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதிற்குட்பட்ட பயனர்கள் மற்றும் அவர்களின் பிறந்த தேதியை உள்ளிடாதவர்கள் அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதைத் தடுக்கும் கொள்கையை நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது.
We have launched Adult Content and Violent Content policies to bring more clarity of our Rules and transparency into enforcement of these areas. These policies replace our former Sensitive Media and Violent Speech policies - but what we enforce against hasn’t changed.
— Safety (@Safety) June 3, 2024
Adult…
NSFW உள்ளடக்கத்தை பதிவிடும் பயனர்கள் அதை "sensitive content" என்று பெயரிட வேண்டும் என்று X கூறுகிறது. மேலும் கூறுகையில், , "அதிகமான கொடூரமான அல்லது பாலியல் வன்முறையை சித்தரிக்கும்" மற்றும் "பாலுறவு அல்லது சிறார்களுக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் ஆபாசமான நடத்தைகளை ஊக்குவித்தல்" போன்றவற்றிக்கு தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.