எலான் மஸ்க் தனது X தளத்தில் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆடியோ, வீடியோ காலிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த வசதி முதல் முதலில் ப்ரீமியம் பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் இதுகுறித்து தனது X பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது இந்த வசதி படிப்படியாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. X தளத்தில் மெசேஜ் செக்ஷனில் இந்த வசதி இடம்பெற்றுள்ளது. அதே போல் தமக்கு யார் அழைக்க வேண்டும் எனவும் இந்த வசதி மூலம் பயனர்கள் control செய்யலாம். இது பயனரின் ப்ரைவசியை பாதுகாக்கிறது.
இந்த ஆப்ஷன் default-ஆக followers-க்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை set it to verified users or everyone எனவும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் IP address-ஐ hide செய்யும் ஆப்ஷன் “enhance call privacy” என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். காலிங் வசதியை பயன்படுத்தும் முன்பாக ஒரு முறையாவது பயனர் மற்ற அந்த நபருக்கு மெசேஜ் செய்திருக்க வேண்டும்.
எலான் மஸ்க் X தளத்தை அனைத்து வசதியையும் உள்ளடக்கிய செயலியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். X- “ an everything app” என்ற பெயரில் மாற்ற முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த புதிய அம்சம் அதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜிமெயில் போல் விரைவில் Xமெயில் (Xmail) கொண்டு வர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“