X (முன்னர் ட்விட்டர்) செயலில் ஆடியோ, வீடியோ கால் அம்சங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ட்விட்டர் தற்போது X என மாற்றப்பட்டுள்ளது. X தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ கூறுகையில், பயனர்கள் தங்கள் மொபைல் எண்களைப் பகிராமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
CNBC உடனான ஒரு உரையாடலின் போது, பயனர்கள் ஷேட் பக்கத்தில் இந்த அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதையும் லிண்டா உறுதிப்படுத்தினார்.
X-ன் டிசைன் என்ஜினியர் ஆண்ட்ரியா கான்வே, ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி கொண்ட புதிய DM மெனு படத்தைப் பகிர்ந்துள்ளார். வீடியோ காலிங் ஆப்ஷன் DM மெனுவில் வலது புறத்தில் அமைந்துள்ளது. மேலும் அதன் தோற்றம் பெரும்பாலான தளங்களை ஒத்திருக்கிறது.
இருப்பினும் X தளம் மற்ற தளங்களைப் போல் அல்லாமல் ஆடியோ, வீடியோ காலிங் செய்ய போன் நம்பர் தேவைப்படாது. இந்த அம்சம் தற்போது இறுதி சோதனை முயற்சியில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. X -ல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களைப் போலவே, நான்- பிரீமியம் சப்ஸ்கிரைப்பர்களுக்கு இதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil