ஜியோமி நிறுவனம் தனது 14 சீரிஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 சீரிஸில் ஜியோமி 14. ஜியோமி 14 ப்ரோ, ஜியோமி 14 அல்ட்ரா ஆகிய 3 போன்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜியோமி 14 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெரியவில்லை.
ஜியோமி 14 சீரிஸ் போன்கள் கடந்தாண்டு அக்டோபரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 14 சீரிஸ் போன்கள் அனைத்தும் Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பை வழங்குகின்றன. இவை ஆண்ட்ராய்டு 14-ன் அடிப்படையில் ஹைப்பர் ஓ.எஸ்-ல் இயங்குகின்றன. 16 ஜி.பி ரேம் வரை வழங்குகின்றன.
ஜியோமி 14 ஆனது 6.36-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதேசமயம் Xiaomi 14 Pro சற்று பெரிய 6.73-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 2 போன்களும் ஒரே மாதிரியான டிசைன் மற்றும் 120Hz AMOLED பேனல் மற்றும் 3000 nits உச்ச பிரகாசம் கொண்டவை.
அதோடு ஜியோமி 14 சீரிஸ் 50 எம்.பி ப்ரைமரி கேமரா மற்றும் லைட் ஹான்டர் 900 சென்சாருடன் வருகிறது. வெண்ணிலா ஜியோமி 14 ஆனது 90W சார்ஜிங்கை ஆதரிக்கும் 4.610mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதேசமயம் ப்ரோ வெர்ஷன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,880mAh பேட்டரியுடன் வருகிறது.
இரண்டு சாதனங்களும் 50W மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன. விலைகள் கடந்த ஆண்டைப் போலவே இருந்தால், Xiaomi 14 ரூ. 50,000 முதல் தொடங்கலாம், அதேசமயம் Xiaomi 14 Pro ரூ.80,000 வரை இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“