Xiaomi 5W Mi Outdoor Bluetooth speaker specifications : ரூ. 2000க்கும் குறைவான விலையில் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வாங்க விரும்புகின்றீர்களா? சியோமி வையர்லெஸ் ஸ்பீக்கர்களை அதிக அளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சியோமியின் புதிய போர்ட்டபிள் ஸ்பீக்கர் இந்தியாவில் வெளியாகியுள்ளது.
Xiaomi Mi Outdoor Bluetooth speaker
சியோமி நிறுவனத்தின் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் 5வாட்ஸ் பவர் அவுட்புட்டில் இயங்குகிறது. இதில் பாசிவ் ரேடியட்டர் ஒன்று உள்ளது. மேலும் இதன் டையப்ராக்ம் கெனடியன் லாங்க் ஃபைபர் பல்ப் வைப்ரேசன் ஃப்லிமில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாஸிவ் ரேடியட்டர் குறைந்த அலையோசைகளை விரிவுபடுத்துகிறது. டையப்ராக்ம் டேம்பிங் சிஸ்டமாக செயல்படுகிறது. இதன் மூலம் நல்ல, இரைச்சலற்ற மியூசிக்கினை பயனர்கள் அனுபவிக்க இயலும்.
மேலும் படிக்க : இனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி!
இந்த ஸ்பீக்கர் கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்ஸா மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டெண்ட்களை சப்போர் செய்கிறது. ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் மூலம் இந்த ஸ்பீக்கர் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்படுகிறது. இந்த ஸ்பீக்கர் மூலமாக போன் கால்கள் பேசிக் கொள்ளலாம்.
ஃபுல் சார்ஜ்ஜில் இந்த ஸ்பீக்கர் 20 மணி நேரம் இசையை இசைக்கும். இதன் பேட்டரி செயல்திறன் 2000mAh ஆகும். IPX5 சான்றிதழ் பெற்றிருப்பதால் இந்த ஸ்பீக்கர் தண்ணீரில் விழுந்தாலும், மழையில் நனைந்தாலும் எந்த பிரச்சனையும் இன்றி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூடூத் ஸ்பீக்கரின் விலை ரூ. 1,399 ஆகும்.