/tamil-ie/media/media_files/uploads/2019/02/xiaomi-black-shark-main.jpg)
Xiaomi Black Shark 2 gaming smartphone
Xiaomi Black Shark 2 gaming smartphone : சியோமி நிறுவனம் தற்போது புதிய கேமிங் போனை தயாரித்து வருகிறது. ப்ளாக் ஷார்க் 2 என்ற பெயரில் வெளியாக உள்ளது இந்த போன். சியோமி நிறுவனத்தின் திட்ட இயக்குநர் வாங் டெங் தாமஸ், சீன சமூக வலைதளமான வெய்போவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Xiaomi Black Shark 2 gaming smartphone - சிறப்பம்சங்கள்
ஸ்கைவாக்கர் என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த போனின் ப்ராசசர் ஸ்நாப்ட்ராகன் 855 ஆகும். 8ஜிபி ரேம் கொண்டுள்ளது இந்த போன் மற்றும் ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்குதளத்தில் இந்த போன் இயங்கும்.
ப்ளாக் ஷார்க் என்ற பெயரில் சீனாவில் இயங்கி வரும் நிறுவனம், கேமிங் போன்கள் தயாரிப்பதில் மிகவும் பெயர்பெற்றது. அந்த நிறுவனத்துடன் இணைந்து தங்களின் கேமிங் போன்களை தயாரித்து வருகிறது சியோமி.
இந்த போனுடன் ப்ளாக் ஷார்க் ஹெலோ என்ற கேமிங் போனும் வெளியாக உள்ளது. ஸ்நாப்ட்ராகன் 854 ப்ரோசசர், 10ஜிபி ரேம், மற்றும் 256 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
ப்ளாக் ஷார்க் 2வின் ஒரிஜினல் மாடல் ப்ளாக் ஷார்க் ஆகும். கடந்த வருடம் சீனாவில் மட்டும் இந்த போன், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ப்ளாக் ஷார்க் 2 போனும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.