Xiaomi Gaming Smartphone Black Shark 2 Pro specifications : சியோமியின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே ப்ளாக் ஷார்க் என்ற பெயரில் 2 போன்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக சியோமி ப்ளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 2,999 யுவான் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய விலைப்படி ரூ. 30,000 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய வெர்ஷன் கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
Xiaomi Gaming Smartphone Black Shark 2 Pro specifications
12ஜிபி ரேம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
குவால்கோம் ஸ்நாப்ட்ராகனின் 855 ப்ளஸ் கேமிங் ப்ரோசசர் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
6.39 இன்ச் ஃபுல் எச்.டி + ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ப்ரைட்னஸ் 430 நிட்ஸ் ஆகும்.
காண்ட்ராஸ்ட் ரேசியோ 60,000 : 1 ஆகும்
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேயில் பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரி சேமிப்புத்திறன் : 4,000 mAh ( 27W fast-charging மூலம் விரைவாக சார்ஜ் செய்து கொள்ளலாம்)
ஓ.எஸ் : ஆண்ட்ராய்ட் 9 பை ஆகும்.
Black Shark 2 Pro கேமரா
இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த கேமிங் ஸ்மார்ட்போன். சோனியின் 48 எம்.பி. முதன்மை கேமராவும் (Sony IMX586 sensor), 13 எம்.பி. அல்ட்ரா வைட் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. செஃல்பி கேமராவின் செயல்திறன் 20 எம்.பி ஆகும்.
Black Shark 2 Pro விலை
128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 2,999 யுவான் (ரூ. 30,000). 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 3,999 யுவான் (ரூ. 40,000). வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : ரேஸ்க்கு தயாரா? சவாலுக்கு அழைக்கும் டி.வி.எஸ் நிறுவனம்?