/tamil-ie/media/media_files/uploads/2017/11/xiaomileijun-main-1.jpg)
இந்தியாவில் இருக்கும் நம்மில் பலர் லே ஜூன் என்ற பெயரை கேள்வி பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஸ்மார்ட்போனில் பிரபலாமாக இருக்கும் Xiaomi நம் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். சில காலங்களுக்கு முன் தொடங்கினால் கூட ஸ்மார்ட்போனில் முன்னணியில் இருக்கும் சாம்சங் அளவிற்கு சந்தை அளவு கொண்டுள்ளது Xiaomi. இருப்பினும் மற்ற நிறுவனங்களை ஒப்பிடும் பொழுது Xiaomi ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனமே. சாவல்களை தாண்டி இந்த துறையில் விரைவில் முன்னேறி கொண்டிருக்கிற Xiaomi தொழில்முனைவர் லே ஜூன் இடம் பேசினோம்.
இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக ஆனது பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் எதிர்பார்த்ததைவிட விரைவில் நடந்ததா?
ஏப்ரல் 2௦15ல் இந்தியாவில் Xiaomi-ஐ அறிமுகம் படுத்தியபோழுது முதல் இடத்தை பிடிக்க குறைந்தது ஐந்து வருடம் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் இரண்டு வருடத்திற்குள் நடந்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. Xiaomi பிராண்ட் மற்றும் தயாரிப்பில் இந்திய வாடிக்கையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த வெற்றியின் முக்கிய காரணமாக நீங்கள் கருதுவது என்ன?
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மூன்று அம்சங்களாகும். ஒன்று உயர்தர தயாரிப்பு, அடுத்து நேர்மை மற்றும் குறைந்த விலை, இறுதியாக இந்தியாவில் எங்கள் தயாரிப்பை வழி நடத்திச்செல்லும் மனு ஜெயின். இதை எல்லாமே இந்திய வாடிக்கையாளர்கள் அறிந்திருக்கிறார்கள். நாங்கள் அயல்நாட்டு நிறுவனம் என்றால் கூட இந்தியாவில் ஒரு நிறுவனமாகவே செயல் படுகிறோம்.
Xiaomiக்கு என்று தனி சந்தை படுத்தும் முறை உள்ளது. இந்திய வாடிகையாளர்கலுக்காக அதில் ஏதேனும் மாற்றம் செய்தீர்களா?
நாங்கள் ஒரு இ-காமர்ஸ் நிறுவனம். இ காமர்ஸ் தளத்தை நிறுவ உயர் திறன் வேண்டும். ஒரு சிறந்த பொருளை தயாரிக்க அதிக முதலீடு தேவை. ஆனால் அதை சரியான விலையில் மக்களிடம் சேர்க்க இணயம் மற்றும் இ காமர்ஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் மற்ற பெரிய நிறுவனங்களில் இருந்து மாறுபட்டு நாங்கள் ஆப்லைனில் ஆரம்பத்தில் இருந்து செயல் படிகிறோம். ஆன்லைன் போலவே ஆப்லைனிலும் குறைந்த விலைக்கு எங்களால் வியாபாரம் செய்ய முடிகிறது. இதற்கு முன் மாதிரியே எம் ஐ ஹோம். இந்தியாவில் எங்களுக்கான கடை 1௦ உள்ளது, அதில் நுற்றுக்கணக்கான கைபேசிகள் விற்கப்படுகின்றனர். இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கடையில் ஒரு மாதத்திற்குள் 20,000 கைபேசிகள் விற்றனர். ரீடெயில் உலகில் இது அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை.
இந்திய சந்தையில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? அந்த படிப்பினையை உலகின் மற்ற இடங்களுக்கு எடுத்து செல்வீர்களா?
இந்த சந்தையில் பல புதுமைகளை உட்புகுத்தியுள்ளோம். உதாரணத்திற்கு, எம் ஐ பார்ட்னர் ப்ரோக்ராம் இந்தியாவில் தொடங்கியது தான். தற்பொழுது அதை மற்ற நாடுகளுக்கும் எடுத்து சென்றுள்ளோம்.
உங்கள் விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் “குறைந்த விலையில்” உங்களால் எப்படி விற்க முடிகிறது?
நாங்கள் வடிவமைக்கும் ஒவ்வொரு தயாரிப்பும் சிறந்த வல்லுனர்களால் தயாரிக்கப்படும் உயர்தர தயாரிப்பாகவே இருக்கிறது. அதன் பின் அதற்கு நாங்கள் முடிந்த அளவு லாபம் இல்லாமலே விலையை நிர்னைக்கிறோம். இதன் மூலம் ஆறு வருடத்திற்குள் எங்களால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற முடியும்.
“எங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் பொழுது எங்களது தயாரிப்பின் விலை பாதியாகவே இருக்கிறது. நாங்கள் விளம்பரத்தில் அதிக செலவு செய்யாததால் எங்களால் இந்த விலையை பெற முடிகிறது”
ஒரு வருடத்திற்குள் Xiaomi பல நிறுவனங்களை தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் அது போல் நிறுவ உள்ளீர்களா?
ஆம், இந்தியாவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்கிறோம். இதன் மூலம் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன் இணைந்து அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிப்போம். இதுவரை ஆறு இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளோம்.
இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?
இந்தியாவின் கல்வி திட்டம் மிக நன்றாக உள்ளது. மனு ஜெயின் ஐ ஐ டி என்பதால் எனக்கு அந்த கல்வி நிறுவனத்தின் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. இருப்பினும் எனக்கு வேறு எந்த கல்வி நிறுவனத்தையும் தெரியாது. சத்யா நடேல்லா மற்றும் சுந்தர் பிச்சையை நான் சந்த்திதுள்ளேன், இதன் மூலம் இந்திய கல்வி தகுதி புலப்படுகிறது.
ஸ்மார்ட்போனில் அதிக புதுமைகளை உட்புகுத்த கடினமாக உள்ளதா?
உலக அளவில் ஆறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர். இந்த வலுவான போட்டியே பல புது கண்டுபிடிப்புகள் உருவாக காரணம். உதாரணமாக எம் ஐ மிக்ஸ் போன் தான் முதல் முதலில் முழு திரை டிஸ்ப்ளேவை கொண்டு வந்தது. நாங்கள் நான்கு வருடத்திற்கு முன்பே இதற்கான முயற்சியில் ஈடுபட்டோம் ஆனால் தற்பொழுது அது சாதாரண ஒன்றாக ஆகிவிட்டது.
வணிகம் செய்வதற்கான சூழல் இந்தியாவில் எப்படி உள்ளது?
உற்பத்தி துறையை வளர்க்க இந்தியா படி படியாக முயற்சிகள் எடுக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு சீனா கூட மிக மெதுவாக படி படியாகவே உயர்வை நோக்கி சென்றது. எங்கள் சப்ளையர்களை இந்தியாவில் தொழிற்சாலை தொடங்க ஊக்குவிக்கிறோம். ஏற்கனவே எங்கள் தொழிற்சாலை சில இந்தியாவில் உள்ளது. எங்கள் சப்ளையர்களும் விரைவில் தொழிற்சாலைகளை நிறுவுவார்கள். ஆனால் அதற்கு சில காலம் எடுக்கும்.
“பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தொழில்துறையை உயர்த்த, வேலை வாய்ப்பை உயர்த்த இதியாவில் உருவாக்குவோம் என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சீனா வளர்ச்சியில் இதுவும் ஒரு பங்காக இருந்திருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி படி படியாகவே அமைய வேண்டும்.
ஐந்து வருடத்தில் Xiaomiயை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
உலகில் உள்ள அனைவரும் Xiaomi தொழில்நுட்பங்களை பயன்படுத்துவார்கள். தற்பொழுது Xiaomi மற்றும் ரெட்மீ போனால் பல இந்தியர்களால் இணையத்தை பயன்படுத்த முடிகிறது. வாடிக்கையாளர்கள் மற்ற பிராண்ட் போன்களை வாங்க வேண்டும் என்றால் இரட்டிப்பு பணத்தை வழங்க வேண்டும் அல்லது குறைந்த விலையில் மலிவான போன்களை வாங்க முடியும்.
நீங்கள் உலகளவில் ஒரு பெரிய பிராண்டாக வளர நீங்கள் நிர்ணயத்து உள்ள காலம் என்ன?
தற்போது நாங்கள் ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளிட்டு 6௦வது நாடுகளில் கால் பதித்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் வட அமெரிக்காவில் துவங்க உள்ளோம். நாங்கள் இத்துறையில் நுழைந்து ஏழு வருடங்களே ஆகிறது. 16,000 ஊழியர்களை கொண்ட வளர்ந்துவரும் நிறுவனமாகவே எங்களை பார்க்கிறோம்.
“இந்தியாவில் உள்ள எங்கள் நிறுவனத்தில் 300 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் எங்கள் போட்டியாளர்கள் நிறுவனத்தில் 100,000 ஊழியர்கள் இருக்கின்றனர்.”
இந்திய சந்தை உங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
சீனாவில் நாங்கள் தான் முதல் இடத்தில் உள்ளோம். விரைவில் இந்தியாவில் முதல் இடத்தை பிடிப்போம். தற்போது நாங்கள் இந்திய சந்தையை முன்னிலை படுத்தியே எங்கள் தயாரிப்புக்கான முடிவுகளை எடுக்கிறோம்.
உதாரணமாக, இந்திய அதிக வெப்ப நிலை கொண்டது. அதனால் அந்த வானிலைக்கு ஏற்றாறு கைபேசி வெப்பநிலையை கட்டுபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பில் இருந்து விற்பனை வரை இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
அணைத்து Xiaomi தயாரிப்பும் இந்தியாவிற்கு வருமா?
இந்தியர்களுக்கு தேவையுள்ள அனைத்து தயாரிப்புகளும் இங்கு வரும். பெங்களூரில் உள்ள எங்கள் நிறுவனத்தில் இந்திய தயாரிப்புக்கான வடிவமைப்புகளை செய்யலாம்.
உங்கள் முதலீட்டாளரின் ஒருவர் ரத்தன் டாட்டா, அவரிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
திரு டாட்டா அவர்களின் வெற்றியை நான் மதிக்கிறேன். நான் இந்திய சந்தைக்கு நுழையும் முன் இந்தியா மீதான உணர்வு அவரை சார்ந்தே இருந்தது. அவர்களின் தொண்டு திட்டங்கள் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. நாங்கள் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம், விரைவில் இந்த ஈகை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
சில வருடங்களாக இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் சீன தயாரிப்பு முன்பு தாக்குபிடிக்க திணறுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் கருத்து என்ன?
சீன நிறுவனங்கள் உலகளாவிய பல நிறுவனங்களிடம் இருந்து பல படிப்பினைகளை கற்றுக்கொண்டோம். அதேபோல் நான் இந்திய தயாரிப்பாளர்களுக்கு நான் சொல்லும் கருத்து, மற்ற வளர்ந்த நிறுவனங்களிடம் கலந்து பேசி பல படிப்பினைகளை பெற வேண்டும். ஏன் என்றால் ஸ்மார்ட்போன் ஒரு மிக பெரிய தொழில் துறை. நாம் தரமான பொருட்களை தயாரித்தால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் மகழ்ச்சி அடைவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.