xiaomi launches 108mp camera smartphone soon : தற்போது சியோமி நிறுவனம் 64 எம்.பி. கேமராவை கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது. ஏற்கனவே சோனி தயாரித்த IMX586 கேமரா சென்சாரைக் கொண்டு 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சியோமி நிறுவனம். புதிதாக 64 எம்.பி.கேமரா ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.
இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் 108 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட திட்டம் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
xiaomi launches 108mp camera smartphone soon
இதன் மொத்த பிக்சல்கள் 108,000,000 ஆகும். ரெசலியூசன் 12032 x 9024. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் இதனால் அவ்வளவு துல்லியமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த கேமராவில் 10 மடங்கு எளிதில் ஸூம் செய்யும் வசதியும் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கேமரா எந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க : மிரட்டும் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ்… சிறப்பம்சங்கள், விலை, விற்பனை, பெர்ஃபார்மென்ஸ் குறித்த முழு அலசல்
64 எம்.பி. கேமரா சிறப்பம்சங்கள்
இதற்கு முன்பு வெளியான 48 எம்.பி. கேமராவின் சென்சாரைக் காட்டிலும் இந்த சென்சார் 38% பெரியது. குறிப்பிட்டு சொல்லப் போனால், 1/1.7 இன்ச் அளவு கொண்டது. சாம்சங் நிறுவனத்தின் ISOCELL Bright GW1 இதில் பொருட்தப்பட உள்ளது. இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் இந்த சென்சார்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்படும் என்று சாம்சங் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஃபேமலி க்ரூப்பில் இருந்து எஸ்கேப் ஆக ஒரு வழி