Advertisment

Xiaomi Mi A2 Android One ஸ்மார்ட் போன் ஜூலை 24-ல் அறிமுகம்: வசதிகள், விலை விவரம்

விலை, சிறப்பம்சம், மற்றும் இன்னபிற தகவல்களை தெரிந்து கொள்ள!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi MI2

Xiaomi MI2

தன்னுடைய இரண்டாவது மி ஆண்ட்ராய்ட் 1 போனை ஸ்பெயினில் அறிமுகப்படுத்த இருக்கிறது சியோமி. வருகின்ற ஜூலை 24ம் தேதி, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியினை சியோமி நடத்த இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

Advertisment

இதில் தங்களுடைய Xiaomi Mi A2 Android One போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi Mi A1 Android One அலைபேசி Mi 5Xன் புதுவடிவமாகும். இந்த போன் 2017ல் அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். அதே போல் Xiaomi Mi A2 Android One அலைபேசி Mi 6Xன் புதுவடிவமாகும்.

இந்நிகழ்ச்சி குறித்தோ புதிய அலைபேசியின் அறிமுகம் குறித்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவல்களையும் சியோமி தரவில்லை. ஆனால் ‘சியோமி இந்தியா’ ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பினை, இடம் மற்றும் தேதி குறிப்பிடாமல் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டது. இது குறித்து ஃபாலோவர்கள் கேட்ட கேள்விக்கு ஸ்பெயின் வரச் சொல்லி பதில் கூறியது சியோமி.

இதேப் போல், இந்த அலைபேசியின் சிறப்பம்சங்களை டீனா என்ற இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அதனால் ஸ்பெயினில் Xiaomi Mi A2 Android One வெளியிடப்படலாம் என்று எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இதே நிகழ்வில் Mi 8 மற்றும் Mi 8 SE வெளியிடப்படலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.

விலை

மூன்று விதமான இண்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வந்துள்ள இந்த போனின் 32ஜிபிக்கான விலை ரூ. 19,800 ஆகும். 64ஜிபி போனின் விலை ரூ. 22,500 ஆகும், 128ஜிபி போனின் விலை சுமார் ரூ. 25,200 இருக்கலாம்.

சிறப்பம்சங்கள்

வடிவமைப்பு மற்றும் திரை

Mi 6X போன்றே இந்த அலைபேசியும் இருக்கலாம் என்றூ தோன்றுகிறது. தொடுதிரை ஃபார்மெட் விகிதம் 18:9 ஆகும். 5.99 இன்ச் உள்ள தொடுதிரையில் பெசல் வித் மிகவும் குறைவு.

நிறங்கள்: கறுப்பு, நீலம், மற்றும் தங்க நிறங்களில் இந்த அலைபேசி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா:

12 எம்பி மற்றும் 20 எம்பி என்ற ரீதியில் இரண்டு பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டிற்கும் மத்தியில் எல்இடி ஃப்ளாஷ் லைட் இருக்கிறது. முகப்பு கேமராவின் ரெசொலியூசன் 20எம்பி ஆகும்.

ப்ரோசஸ்ஸர், பேட்டரி, மற்றும் மெமரி 

ஸ்னாப்ட்ராகன் 660 ப்ரோசஸ்ஸர் 4ஜிபி RAM அல்லது 6ஜிபி RAM உடன் இணைந்து செயல்படும்.  3,010mAh பேட்டரி, மற்றும் யுஎஸ்பி சி சார்ஜ் போர்ட்டினை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இந்த அலைபேசி இயங்கும்.

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment