Xiaomi Mi Band 3i launched in India for Rs 1,299 : இந்தியாவில் சியோமி நிறுவனம் இன்று எம்.ஐ. பேண்ட் 3ஐ என்ற ஹெல்த் ட்ராக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1,299 ஆகும். இந்திய மார்க்கெட்டில் மட்டுமே அறிமுகமாகியிருக்கும் இந்த பேண்டில் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஸ்டெப் மற்றும் கலோரி கவுண்ட்டர்களை அறிந்து கொள்ளலாம். மேலும் இது தண்ணீர் மூலம் பாதிப்படையாது.
சிறப்பம்சங்கள்
0.78 இன்ச் டச் டிஸ்பிளே (128 x 80 Pixels)
300 நைட்ஸ் பிரைட்னெஸ்
ஆண்டி ஃபிங்கர் பிரிண்ட் கோட்டிங்க்
எம். ஐ பேண்ட் 3ஐ-யில் 110mAh செயல்திறன் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் உங்களால் 20 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள இயலும்.
உங்கள் போன் நோட்டிஃபிகேசன்களை இது காட்டும். மேலும் இந்த ட்ராக்கர் மூலம் நீங்கள் போன்கால்களை துண்டிக்கவும் இயலும்.
அலார்ம் மற்றும் வெதர் ஃபோர்காஸ்டிங் என அனைத்தையும் இந்த ட்ராக்கர் உங்களுக்காக டிஸ்பிளே செய்கிறது இந்த ஸ்மார்ட்பேண்ட்.
50 மீட்டர் ஆழத்தில் 10 நிமிடங்களுக்கு மேலாக இந்த பேண்ட் நீரில் மூழ்கினாலும் இதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங், மற்றும் ட்ரெட்மில் என அனைத்து உடற்பயிற்சி குறித்தும் நீங்கள் மானிட்டர் செய்து கொள்ளலாம்.
இதனுடைய விலை வெறும் ரூ. 1299 மட்டுமே!