Mi Band 4, Mi 65 Inch TV launch Event : ஜியோமி நிறுவனம், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், MI 4K டிஸ்பிளே டிவி Mi Band 4 மற்றும் Mi வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட பொருட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பொருட்கள், ஜியோமி நிறுவனத்தின் Mi.com உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களின் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழலாம் என்று ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MI 4K டிஸ்பிளே டிவிக்கள் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்சனுடன் 40 இஞ்ச், 43 இஞ்ச், 50 இஞ்ச் மற்றும் 65 இஞ்ச் என்ற அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விலை நிலவரங்கள்
Mi Band 4 : பிட்னெஸ் பேண்ட் கேட்டகிரியில் MI நிறுவனத்தின் band 3, இந்தியாவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது எனலாம். அந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் பலனாக தற்போது Mi band 4 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை, ரூ.2,299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோமியின் இணையதளம் மற்றும் அமேசான் இணையதளங்களில் செப்டம்பர் 19ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Mi Smart Water Purifier : வாட்டர் பியூரிபையரின் விலை ரூ.11,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பில்டர் கேட்ரிட்ஜின் விலை ரூ. 3,997 ஆகும். ஜியோமி இணையதளம், பிளிப்கார்ட் மற்றும் Mi.com இணையதளங்களில், செப்டம்பர் 19ம் தேதி முதல் கிடைக்கும்.
Mi TV 4X 65 இஞ்ச் 4k டிஸ்பிளே டிவி - ரூ.54,999
50 இஞ்ச் டிவி ரூ. 29,999
43 இஞ்ச் டிவி - ரூ. 24,999
40 இஞ்ச் டிவி - ரூ.17,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Mi TV 4X டிவிக்கள், பேட்ச்வால் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்ட் டிவியை தன்னகத்தே கொண்டுள்ளது. பயனாளர்கள், இரண்டு மோடிலும் டிவியை பார்க்கும் வசதி இதில் உள்ளது. ஜியோமி நிறுவனம் ஆன்லைன் சேனல்கள் மட்டுமல்லாது ஆப்லைன் சேனல்களையும் விரைவில் இந்த டிவிக்களில் கொண்டு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 29ம் தேதி முதல் Mi.com, பிளிப்கார்ட், , Mi homes உள்ளிட்ட தளங்களில் இந்த டிவிக்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.