Xiaomi Mi CC9 Pro smartphone specifications : சியோமியின் சிசி சீரிஸில் புதிதாக இணைந்துள்ள எம்.ஐ.சிசி9 போன் வருகின்ற 5ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே `108 எம்.பி. செயல்திறன் கொண்ட கேமராவை அறிமுகம் செய்வோம் என்று அறிவித்திருந்த சியோமி நிறுவனம் தற்போது அந்த கேமராவை இந்த சீரிஸில் அறிமுகம் செய்ய வைக்க உள்ளது.
Advertisment
சீனாவில் நவம்பர் 5ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் எம்.ஐ. டிவி 5 மற்றும் எம்.ஐ வாட்ச்களும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 108 எம்.பி. செயல்திறன் கொண்ட கேமராவை சாம்சங் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. மேலும் ஐந்து மடங்கு வரை துல்லியமாக ஸூம் செய்ய இயலும்.
அனைத்து லென்ஸ்களும் வெர்ட்டிக்கிளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Xiaomi Mi CC9 Pro smartphone specifications
இந்த போன் 6.4 இன்ச் ஃபுல் எச்.டி திரையை கொண்டுள்ளது. ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையில் வாட்டார் ட்ராப் நோட்ச்சுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
108MP + 13MP (wide-angle lens) + 8MP (telephoto) என மூன்று பின்பக்க கேமராக்களையும் 32 எம்.பி. செல்ஃபி கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
பேட்டரி 4000mAh வரை தாக்குப் பிடிக்க கூடியது. மேலும் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் ரீசார்ஜ் டெக்னாலஜி மூலம் விரைவில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய் 10-ல் இயங்கும் இந்த போனின் மொத்த எடை 180 கிராம்கள் ஆகும்.
ஸ்நாப்ட்ராகன் 730ஜி ப்ரோசசர் பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் யாவும் அதிகாரப்பூர்வமற்ற லீக்கான செய்திகள் தான். முழுமையான சிறப்பம்சங்களை 5ம் தேதி தான் நாம் தெரிந்து கொள்ள இயலும்.