10 ஜிபி RAM செயல்திறனுடன் சியோமியின் புதிய போன் அறிமுகம்...

10GB RAM, 5G தொழில்நுட்பம், 10w வயர்லெஸ் சார்ஜிங் டிவைஸ் என அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்ட சியோமி...

Xiaomi Mi Mix 3 : 5G நெட்வொர்க், 10ஜிபி RAM என அசத்தலான அம்சங்களுடன் இன்று வெளியாகியுள்ளது சியோமி Mi Mix 3 ஸ்மார்ட் போன்.  சீனாவின் தலைநகரான பெய்ஜிஙில் நடைபெற்று வரும் இந்த ஸ்மார்ட் போனின் அறிமுக விழாவினை சியோமியின் அதிகாரப்பூர்வ இணைய தளமான மி சீனாவில் காணலாம்.

சீன மொழியில் ஒலிபரப்பாகி வருகிறது இந்த விழா. ஆனால் முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில் ஆங்கில அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Xiaomi Mi Mix 3, Xiaomi Mi Mix 3 price, Xiaomi Mi Mix 3 specifications

Xiaomi Mi Mix 3 theme : forbidden palace

Xiaomi Mi Mix 3 சிறப்பம்சங்கள் என்ன ?

  • 6.39 இன்ஞ் AMOLED திரையுடன் வெளியாகியுள்ளது இந்த போன். இதன் போன் ஃபார்மட் 19.5:9.
  • நீலம், பச்சை, மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் வெளியாகியுள்ளது.
  • ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த போனின் மற்றொரு வெர்ஷன் 2019ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் தான் வெளியாகும்.
  • இந்த போன் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதே நிகழ்வில் 10W வயர்லெஸ் சார்ஜிங் பேட்டினையும் வெளியிட்டுள்ளது.
Xiaomi Mi Mix 3, Xiaomi Mi Mix 3 price, Xiaomi Mi Mix 3 specifications

10W wireless charging pad

நான்கு கேமராக்களுடன் அறிமுகமான Xiaomi Mi Mix 3

இரண்டு முன்பக்க கேமராக்கள், இரண்டு ரியர் கேமராக்கள் என 4 கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன்.

முன்பக்க கேமராக்கள் 24 எம்.பி மற்றும் 2 எம்.பி செயல் திறன் கொண்ட சோனி நிறுவனத்தின் கேமராக்கள் ஆகும். ரியர் கேமராக்கள் இரண்டும் 12 எம்.பி செயல்திறன் கொண்டவை. 1.6 மைக்ரான்கள் கொண்ட திறன் கொண்ட லென்சைக் கொண்ட முதன்மை கேமராவின் அபேர்ச்சர் f/1.8 ஆகும்.  1.0 மைக்ரான்கள் கொண்ட திறன் கொண்ட லென்சைக் கொண்ட முதன்மை கேமராவின் அபேர்ச்சர் f/2.4 ஆகும். To read and know more about Xiaomi Mi Mix 3 in English

விலை மற்றும் வேரியேசன்கள்

6GB RAM/128GB செயல் திறன் கொண்ட போனின் விலை 34,800 ரூபாய் ஆகும்.
8GB RAM/128GB சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை 37, 980 ஆகும்.
8GB RAM/256GB சேமிப்புத் திறன் கொண்ட போன் 42,210 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.

10GB RAM/256GB சேமிப்புத் திறன் கொண்ட போனை மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது சியோமி என அவ்விழாவில் குறிப்பிட்டிருக்கிறது. இதன் விலை ரூ 52,750 இவ்வளவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close