சியோமியின் புதுவரவு என்ன? இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகுமா?

இங்கிலாந்து, நெதெர்லாந்து, பெல்ஜியம், லக்ஸ்ம்பர்க் உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

Xiaomi Mi Note 10, Mi Note 10 Pro
Xiaomi Mi Note 10, Mi Note 10 Pro

Xiaomi Mi Note 10, Mi Note 10 Pro : சியோமி நிறுவனத்தின் நோட் சீரிஸில் வெளியாகும் போன்களுக்கு எப்போதும் அளவுக்கு அதிகமான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். தற்போது சியோமி நிறுவனம் எம்.ஐ. நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஸ்பெய்ன் நாட்டில் வெளியிட்டது சியோமி நிறுவனம்.

ஐரோப்பிய சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை எம்.ஐ. நோட் 10 – ரூ. 43,200 (6GB RAM/128GB) ஆகும். எம்.ஐ. நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 51,000 (8GB RAM/256GB) ஆகும். ஸ்பெய்ன் நாட்டி நவம்பர் 15ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஃப்ரான்ஸ் நாட்டில் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது. இங்கிலாந்து, நெதெர்லாந்து, பெல்ஜியம், லக்ஸ்ம்பர்க் உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

க்ளாசியர் வொய்ட், அரோரா க்ரீன், மிட்நைட் ப்ளாக் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 108 எம்.பி. கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 எம்.பி. வ்வைட் ஆங்கிள் சென்சார், 12 எம்.பி. டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

To read this article in English 

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Xiaomi mi note 10 mi note 10 pro with 108mp camera launched

Next Story
ஒன்ப்ளஸ் 7T, 7T ப்ரோ குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே!OnePlus 7T & 7T Pro FAQ, OnePlus 7T & 7T Pro FAQ, Amazon Fab Phones Fest: Deals on OnePlus 7T, iPhone 11, Galaxy M-series
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com