சியோமி Mi நோட் 10 : உலகின் முதல் 5 கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியீடு?

உலக மார்க்கெட்டில் விற்கப்படும் விலையில் இருந்து சரிபாதி குறைவான விலையில் சீனா வேரியண்ட்  விற்பனை செய்யப்படுகிறது.

Xiaomi Mi Note 10 specifications, price, launch, availability
Xiaomi Mi Note 10 specifications, price, launch, availability

Xiaomi Mi Note 10 specifications, price, launch, availability and more :  ஐந்து லென்ஸ்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனான சியோமி எம்.ஐ. சிசி9 ப்ரோ அல்லது எம்.ஐ நோட் 10 இந்தியாவுக்கு வர இருப்பதாக மறைமுகமாக சியோமி இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. “It’s coming #108MP” என்று ட்விட்டரில் அறிவிக்கப்பட்டவுடனே ட்ரெண்டாக ஆரம்பித்தது இந்த ஹேஷ்டேக். என்ன இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் என்பதை நாம் இங்கே காண்போம்.  ஸ்நாப்ட்ராகன் 730ஜி ப்ரோசசரில் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன். 108 எம்.பி. கேமராவை இயக்கும் அளவுக்கு அதிவேகமாக இயங்க வல்லது இந்த ப்ரோசசர்.

விலை

ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 549 யூரோக்களுக்கு விற்பனையாகிறது இந்த ஸ்மார்ட்போன். 6ஜிபி/128ஜிபி மாடலின் விலை ரூ. 43 ஆயிரம் ஆகும். 8ஜிபி/256ஜிபி மாடல் ஸ்மார்ட்போனின் விலை 649 யூரோ (அதாவது ரூ. 51, 000 இந்திய மதிப்பில்).  உலக மார்க்கெட்டில் விற்கப்படும் விலையில் இருந்து சரிபாதி குறைவான விலையில் சீனா வேரியண்ட்  விற்பனை செய்யப்படுகிறது. 8GB/128GB மாடல் போனின் சீனா விலை யுவான் 3,099 (இந்திய மதிப்பில் ரூ. 31,000) மற்றும் 8GB/256GB மாடலின் விலை 3,499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 35,000). எப்போதும் சியோமி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில், சீன விலைக்கு நிகரான விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆங்கிலத்தில் பெற

Mi Note 10 சிறப்பம்சங்கள்

6.47 இன்ச் ஃபுல் எச்.டி திரை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்

கர்வ்ட் எட்ஜ்களுடன் டாட் – நோட்ச் டாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 32 எம்.பி. செல்ஃபி கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது. ஐந்து பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது.

108MP கேமரா சாம்சங் மற்றும் சியோமியின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 20 எம்.பி அல்ட்ராவைட் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் ஆகியவையும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ளது.

5,260mAh செயற்திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதனை சார்ஜ் செய்ய 30வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்துடன் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், என்.எஃப்.சி சப்போர்ட், ஹை-ரெசலியூசன் ஆடியோ ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Xiaomi mi note 10 specifications price launch availability

Next Story
தொலைந்து போன ஆதார் அட்டையை 5 நாட்களில் திரும்ப பெற என்ன செய்யவது?New Aadhaar app MAadhaar launched
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express