65 இன்ச் டிவியை தற்போது ரூ. 54,999க்கு விற்பனை செய்து வருகிறது சியோமி நிறுவனம். அதே போன்று 50 இன்ச் அளவுள்ள டிவியின் விலை வெறும் ரூ. 30 ஆயிரம் மட்டுமே. 43 இன்ச் டிவியின் விலை ரூ. 24,999 ஆகும். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ போன்றவைகளை உள்ளடக்கிய டிவிகளை சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது சியோமி நிறுவனம்.
மேலும் படிக்க : 108 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் நவம்பர் 5-ல் அறிமுகம்
Xiaomi Mi TV 4X 50-inch specifications
தற்போது வெளியாகியுள்ள இந்த டிவி நிறைய சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. 4கே எச்.டி.ஆர் ரெடி எல்.ஈ.டி டிஸ்பிளேவுடன் வெளியாகியுள்ளது இந்த டிவி.
டோல்பி + டி.டி.எஸ் - எச்.டியுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ ஆகியவை ப்ரீ லோடடாக இருப்பதால் உங்களுக்கு மிகச்சிறந்த பொழுது போக்கு அம்சமாக இந்த டிவி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆண்ட்ராய்ட் டிவி பை இயங்கு தளத்தில் இந்த டிவி செயல்படுவதால் இதை நீங்கள் பேட்ச்வாலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். டிவி லான்ச்சராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிகவும் மெல்லியதாக இருக்கும் இந்த டிவியை நீங்கள் வால் மௌண்டிங்கும் செய்து கொள்ளலாம். விருப்பம் இல்லாதவர்கள் ஸ்டேண்ட்களில் வைத்தும் பயன்படுத்திக் கொள்லலாம்.
USB 2.0 ports, three HDMI ports, one AV port and dual-band WiFi 2.4GHz/5GHz, LAN port போன்ற இணைப்பு வசதிகள் இதில் உள்ளது. அதனால் டேட்டா ட்ரான்ஸ்ஃபர், டேட்டா டிஸ்பிளே, இண்டெர்நெட் அக்செஸ் ஆகியவற்றை மிக எளிமையாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இதன் ரிமோட்டில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக பிரத்யேகமான ஸ்விட்ச்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
விலை : ரூ. 29,999