இந்தியாவிற்கு வர இருக்கும் அடுத்த சியோமி போன் என்ன?

ஸ்நாப்ட்ராகன் 845 சிப்செட்டுடன் வரும் விலை குறைந்த திறன்பேசி இது தான் !

Pocophone, Xiaomi

போக்கோபோன் (Pocophone) என்ற பெயரில் சியோமி தன்னுடைய அடுத்த திறன்பேசியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியா மற்றும் இதர நாடுகளில் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று அதன் நிர்வாகம் கூறியுள்ளது.

போக்கோபோன் F1 என்ற அந்த போன் ஃபெடரல் கம்யூனிகேசன் கமிசன் என்ற இணையத்தில் வெளிவிட்டிருந்தது. மேலும் ப்ளூடூத் SIG என்ற சான்றிதழை மிக சமீபத்தில் போக்கோபோன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோபோன் (Pocophone) சிறப்பம்சங்கள்

போக்கோபோன் (Pocophone) 6 அல்லது 8 ஜிபி RAMல் வரும். மேலும் அதன் இன்டர்நெல் ஸ்டோரேஜ் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகும். ப்ரோசஸ்ஸர் – குவால்கோம் நிறுவனத்தின் ஹையர் எண்ட் ப்ரோசஸ்ஸரான ஸ்நாப்ட்ராகன் 845 சிப்செட் இதில் இடம் பெறப் போகிறது.

திரை

5.99 அங்குல நீளம் கொண்ட இந்த போனின் ரெசலியூசன் 2160 x 1080 பிக்சல் ஆகும். 18:9 திரை பார்மட்டினை கொண்டிருக்கும்.

கேமரா

12MP + 5MP என பின்பக்க இரட்டைக் கேமராக்களுடன் வருகிறது இந்த போன். முன்பக்கக் கேமரா 20MP சென்சாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியினை ஆங்கிலேயத்தில் படிக்க

விலை

6GB RAM/64GB போக்கோபோனின் விலை 420 EUR (ரூபாய். 33,645 ) ஆகும். 8GB RAM/128GB போக்கோபோனின் விலை 460 EUR (ரூபாய் 36,849) ஆகும்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Xiaomi pocophone f1 with snapdragon 845 may launch in india soon

Next Story
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்Whatsapp tips tricks, whatsapp, whatsapp security, whatsapp features, whatsapp latest features, whatsapp blue tick
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X