சியோமியின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் டிசம்பர் 7ல் ரிலீஸ்

சியோமியின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் டிசம்பர் 7 சீனாவில் வெளியாகிறது. ஸ்னாப் டிராகன் 625 செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64...

சியோமியின் அடுத்த புதிய மாடலான ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் டிசம்பர் 7 சீனாவில் வெளியாகிறது. சீனாவின் சமூக ஊடகம் ஆன “Weibo”வில் வெளியிட்டு தேதியை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்பொழுது வெளிவந்துள்ள ஒன் பிளஸ் 5டி முழு டிஸ்ப்ளேவுடன் வெளிவர உள்ளது.

இந்த இரு ஸ்மார்ட்போன்களில் ரெட்மி 5 கைபேசியின் ஒரு சில அம்சங்கள் வெளிவந்துள்ளது. 5.7 அங்குள எச்டி திரை மற்றும் 18:9 விகிதம் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதே டிஸ்ப்ளே அளவை கொண்ட மற்ற ஸ்மார்ட்பொன்கள் போலவே இதிலும் பின் பக்கம் பிங்கர் சென்சார் உள்ளது.

ஸ்னாப் டிராகன் 625 செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு இக்கைபேசி வெளிவரலாம். அடுத்து பின்புறம் 12 மெகா பிக்சலும் முன் பக்கம் 5 பிக்சல் கேமராக் கொண்டு வறுகிறது. ஆனால் சமிபத்திய அப்டேட் ஆன அண்ட்ராய்டு 8.0 ஓரியோ இல்லாமல் அண்ட்ராய்டு 7.0 நௌகட் அப்டேடை கொண்டுள்ளது. 3,300mAh பேட்டரி கொண்டு வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ 13,700க்கு விற்கப்படும்.

ரெட்மி 5 பிளஸ் இதைவிட கொஞ்சம் பெரிய திரை 5.9 அங்குல டிஸ்ப்ளே உடன் அமைகிறது. அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 செயலி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆகும். 4000mAh பேட்டரி இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. ஆனால் இவை யாவும் இன்னும் உறுதி படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் சியோமி நவம்பர் 30 “தேஷ் கா ஸ்மார்ட்போன்” என ஒரு இந்தியாவில் ஒரு கைபேசியை அறிமுக படுத்தப்போவதாக விளம்பரப்படுத்தி வருகிறது. அது தற்போது சீனாவில் இருக்கும் ரெட்மி 5ஏ என சொல்லப்படுகிறது.

×Close
×Close