இன்று இரவு 12 மணிக்கு... பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை!

இந்த ஸ்மார்ட்ஃபோனது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் இன்று இரவு 12 மணிக்கு ஆன்லைனின் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் இன்று இரவு 12 மணிக்கு ஆன்லைனின் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போனின் சக்சஸை தொடர்ந்து சியோமி ரெட்மி 5ஏ அறிமுகம் செய்யப்பட்டது. ஷாம்பெயின் கோல்டு, ஜெர்ரி மற்றும் பிளாட்டினர் கோல்டு ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், பட்ஜெய் விலைவில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறைந்த விலையில், அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்கள் ஃபோன்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இன்று(22.3.18) இரவு 12 மணிக்கு ப்ளிஃப்கார்டின் தளத்தில் இந்த ஸ்மார்ட்ஃபோனின் விற்பனை ஆரம்பமாகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்ட ரெட்மி 5ஏ வின் விலை ரூ 6,999 யாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இஎம்ஐ வசதியும் ரூ. 250 ல் இருந்து ஆரம்பமாகிறது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ யூசர்களுக்கு ரூ. 2,200 வரை கேஸ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 5ஏ சிறப்மசங்கள்:

1. 5 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே(ரெசொலூசன் 280 x 720 பிக்சல்ஸ்)

2. குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 ப்ராசஸர்

3. 13 எம்.பி ரியர் கேமரா

4. 5 எம்.பி செல்ஃபி கேமரா

5. 3,120mAh பேட்டரி திறன்

6. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம்

7. மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி வரை அதிகரிக்கலாம்.

×Close
×Close