Xiaomi Redmi 8 smartphone specifications, feature, price, launch, availability and more : சியோமி நிறுவனம் தங்களுடைய ஸ்மார்ட்போனான சியோமி ரெட்மி 8-ஐ வருகின்ற 9ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. சியோமி நிறுவனத்தின் இந்திய மேலாளர் இந்த தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்வீட் செய்து அறிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த அப்டேட்களையும் லேசாக கசியவிட்டுள்ளார்.
Xiaomi Redmi 8 smartphone specifications
இந்த ஸ்மார்ட்போன் எச்.டி. திரை மற்றும் 1520 x 720 பிக்சல்கள் ரெசலியூசனுடன் வெளியாக உள்ளது.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் கார்ட் ஆட்ரெனோ 505வும் இதில் இணைக்கப்பட்டுள்ளதால் இதன் ஃபங்கசனிங் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3ஜிபி ரேம் மற்றும் இரண்டு பின்பக்க கேமரா என ஒரு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் விருப்பதை பூர்த்தி செய்யும் அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமரா 12 எம்.பி + 8 எம்.பி. செயல்திறனுடன் வெளியாக உள்ளது.
செல்ஃபி கேமரா 8 எம்.பி. செயல்திறன் கொண்டவை
மேலும் படிக்க : மதுரைக்காரங்களுக்கு நல்ல செய்தி சொன்ன பி.எஸ்.என்.எல்!