Xiaomi Redmi 9 smartphone specifications, price, sales, availability : இந்த வருடத்தின் துவக்கத்தில் வெளியானது ரெட்மீ ஸ்மார்ட்போன் 8. இந்த வருடத்தில் இந்நிறுவனம் எத்தனையோ ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்த நிலையிலும் ரெட்மீ 8 மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.
Advertisment
இந்த ஸ்மார்ட்போன் வருகின்ற 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீன சந்தைகளில் வெளியாக உள்ளது. எந்த மாதத்தில் எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Xiaomi Redmi 9 specifications
Advertisment
Advertisement
மீடியாடெக் நிறுவனத்தின் ஜி70 ப்ரோசசர் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடல் 4ஜிபி ரேமையும், 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
6.6 இன்ச் ஸ்கிரின் அளவு திரை கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகும்.
இதற்கு முன்பு வெளியான ஸ்மார்ட்போனில் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசர் தான் பொறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ரெட்மீ 8 ப்ரோ வெளியான போது அதில் ஹெலியோ மீடியாடெக் பயன்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்த கம்பெனியின் ப்ரோசசரை தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது சியோமி நிறுவனம்.